காமக்கொடூரன்.. முதலில் குமார்.. அப்பறம் மாரிமுத்து.. துடிதுடித்த 17 வயது பிஞ்சு.. கதிகலங்கிய கரூர்
பள்ளி மாணவியை சீரழித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
கரூர்: "உன்னைதான் கல்யாணம் செய்துக்குவேன்" என்று சத்தியம் செய்தே, இளம்பெண்ணிடம் பலமுறை உறவு வைத்து கொண்டுள்ளான் ஒரு கொடூரன்.. இந்த ஆபாச வீடியோவை காட்டி காட்டியே, அதே பெண்ணை பலமுறை மிரட்டி மிரட்டி சீரழித்துள்ளான் இன்னொரு காமக்கொடூரன்.. நடந்த விஷயத்தை எல்லாம் கேள்விப்பட்டு, கரூர் மாவட்டமே கதிலங்கி போயுள்ளது..!
Recommended Video
கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தபெண்.. வெறும் 17 வயசுதான் ஆகிறது.. அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்த மாணவிக்கு திருப்பூரை சேர்ந்த குமார் என்ற இளைஞர் ஃபேஸ்புக் மூலம் பழக்கமாகி உள்ளார்.. இந்த பழக்கம், நாளடைவில் காதலாக வந்து நின்றது..

உறவு
அதிலும் மாணவி, அந்த இளைஞர் குமாரை அளவுக்கு அதிகமாக காதலித்து வந்துள்ளார்.. இதைதான் குமார் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.. கல்யாணம் செய்துக்கிட்டால் அது உன்னைத்தான் என்று சொல்லி நெருக்கமாக உறவு வைக்கும் அளவுக்கு சென்றுள்ளார்.. அதை செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டார்.. பிறகு, பல முறை கட்டாயப்படுத்தியும் மாணவியிடம் உறவு வைத்துக் கொண்டுள்ளார் குமார்..

மெக்கானிக்
இந்த விஷயம் அனைத்தும், மாரிமுத்து என்பவருக்கு தெரிந்துள்ளது.. மாரிமுத்து, மாணவி வசித்து வரும் தெருவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருபவராம்.. 35 வயதாகிறது.. ஆபாச வீடியோக்களை மாரிமுத்துவும் பார்த்துள்ளார்.. இந்த வீடியோ வெளியே வராமல் இருக்க வேண்டுமானால், தன்னுடைய ஆசைக்கும் இணங்க வேண்டும், இல்லாவிட்டால் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுவேன் என்றும் மாணவியை மிரட்டி உள்ளார்.. இப்படி மிரட்டி மிரட்டியே அவரும் மாணவியிடம் பலமுறை உறவு வைத்துக்கொண்டாராம்.

உடலுறவு
இப்போது மாணவி கர்ப்பமாக இருக்கிறார்.. 8 மாத கர்ப்பம்.. இருவரிடமும் சிக்கி கொண்டு விழித்த மாணவி, என்ன செய்வதென்றே தெரியாமல் கரூர் மகளிர் ஸ்டேஷனில் புகார் செய்தார்.. அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வந்தார்... இப்போது மெக்கானிக் மாரிமுத்துவை பிடித்துவிட்டார்கள்.. போக்சோவில் கைது செய்து உள்ளே தூக்கி வைத்துள்ளார்கள்.. ஆனால், எல்லாவற்றிற்கும் மூலகாரணமான குமாரை காணோமாம்.. அவரை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்..

கைது
பலமுறை மாணவியுடன் உடலுறவு கொண்ட விஷயமும், அது தொடர்பான வீடியோவும் மாரிமுத்துவுக்கு எப்படி தெரியும் என்று தெரியவில்லை.. ஆனால், அந்த வீடியோவை காட்டி காட்டியே, மாரிமுத்துவும் பலமுறை உறவு கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.. குமாரும், மாரிமுத்துவும் இளம்பிஞ்சுவின் வாழ்க்கையையே நாசமாக்கிய இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..!
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications