இது வெறும் டீசர்தான்.. கரூரில் சிறப்பான தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்.. உற்சாகத்தில் தொண்டர்கள்!
நேற்று கரூரில் நடந்த திமுகவின் பிரம்மாண்ட விழா பெரிய ஹிட் அடித்து உள்ளது.
கரூர்: நேற்று கரூரில் நடந்த திமுகவின் பிரம்மாண்ட விழா பெரிய ஹிட் அடித்து உள்ளது. இந்த விழாவிற்கு கூடிய கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் பெரிய வைரலாகி உள்ளது.
நேற்று கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட விழா நடந்தது. செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பலர் இந்த விழாவில் திமுகவில் இணைந்தார்கள்.
இந்த விழாவில் பிற கட்சிகளை சேர்ந்த 40,000க்கும் அதிகமான பேர் திமுகவில் இணைந்தார்கள். திமுகவை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா என்று விழாவிற்கு பெயர் வைக்கப்பட்டது.

எத்தனை பேர்
இந்த கூட்டத்தில் திமுக எப்போதும் இல்லாத அளவிற்கு பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது. 70 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்ட கூட்டம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இணையத்தில் நேற்றில் இருந்து இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதிக அளவில் பெண்கள்
அதேபோல் இந்த கூட்டத்தில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு உள்ளனர். முதல் வரிசை முழுக்க பெண்களுக்கே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆண்களை விட பெண்களே இந்த கூட்டத்திற்கு அதிகமாக வந்திருந்தனர். கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு இத்தனை பெரிய கூட்டம் கூடுவது இதுவே முதல்முறையாகும்.

ஸ்டாலின் ஆச்சர்யம்
இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கூட இந்த கூட்டத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டு ''நம்மை வெல்ல யாரும் இல்லை; பிறக்க போவதும் இல்லை. இந்த மக்கள் கூட்டத்தை பார்த்தாலே நமக்கு தோல்வியே கிடையாது என்பது தெரிகிறது. கரூரில் மக்கள் வெள்ளம் தற்போது திறந்துள்ளது. '' என்று ஆச்சர்யமாக கூறினார்.
|
வெறும் டீசர்தான்
இதுகுறித்து டிவிட் செய்துள்ள திமுக எம்எல்ஏ ஜே அன்பழகன் ''2019 தேர்தலுக்கு இது வெறும் டீசர்தான்.'' என்று சந்தோசமாக கூறியுள்ளார்.

எத்தனை பேர் இணைந்தனர்
நேற்று நடந்த இந்த கூட்டத்தில் திமுகவில் 40,000 பேர் வரை இணைந்தனர் என்று கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களே 30,000க்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 30,425 பேர் திமுகவில் இணைந்தது திமுகவிற்கு பெரிய வலு சேர்க்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

முதல் முறை கொங்கு
தமிழகத்தில் திமுக பெரிய கட்சியாக இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் இதுவரை பெரிய வெற்றியை ருசித்தது இல்லை. இந்த நிலையில் முதல்முறை அங்கும் கூட திமுக இவ்வளவு பெரிய ஆதரவை பெற்று இருப்பது அந்த கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications