"எனக்கு டைம் இல்லை".. அரசு பள்ளியில் சாப்பிட மறுத்த அன்பில் மகேஷ்! பெண் பணியாளரிடம் கூறியதை பாருங்க
கரூர்: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் தயாரிக்கும் உணவை சாப்பிடும்படி பெண் பணியாளர் கூறவே அன்பில் மகேஷ் சிரித்தபடி மறுத்து சென்றார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் உள்ளார். இவர் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். அதுமட்டுமின்றி அன்பில் மகேசும், முதல்வர் ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் நெருக்கமான நண்பர்கள்.

இந்நிலையில் தான் அன்பில் மகேஷ் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வேளையில் அன்பில் மகேஷ் மாணவர்களுடன் ஒன்றாக வகுப்பறையில் அமர்ந்து இருப்பதும், மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களை உற்சாகப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களின் கற்றல் திறன், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்து வருகிறார்.
மாணவி பலாத்காரம்.. கைதானவர் அமைச்சர் அன்பில் மகேஷின் டிரைவர் இல்லை.. திருச்சி எஸ்பி விளக்கம்
அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பள்ளியில் உள்ள சமையல் கூடத்துக்கு சென்றார். அங்கு பெண் பணியாளர்கள் உணவு சமைத்து கொண்டிருந்தனர். அவர்களிடம் அன்பில் மகேஷ், ‛‛என்னம்மா சாப்பாடு இன்று’’ என்று கேள்வி கேட்டார். அதற்கு பெண் ஊழியர், ‛‛புளி சாதம்’’ என்று பதிலளித்தார்.
இதையடுத்து அன்பில் மகேஷ், ‛‛முட்டை எல்லாம் கரெக்ட்டா வருதா? எத்தனை பிள்ளைங்க ஒருநாளில் சாப்பிடறாங்க?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த ஊழியர், ‛‛முட்டை எல்லாம் வருகிறது. மொத்தம் 108 குழந்தைகள் சாப்பிடுகிறார்கள்'' என்று பதிலளித்தார். இதையடுத்து அன்பில் மகேஷ் வரேன் மா என்று புறப்பட்டார்.
அப்போது உணவு சமைக்கும் பணியாளர்கள், ‛‛சாப்பிட வாங்க.. சாப்பிட்டு போங்க’’ என்று கேள்வி எழுப்பினார். அதனை கேட்டு சிரித்த அன்பில் மகேஷ், ‛‛வரேன் மா.. இப்போது டைம் இல்லைம்மா.. இன்னொரு நாள் சாப்பாட்டுக்கு வரும்போது வந்து சாப்பிடுகிறேன்.. நம்ம புள்ளைகளுக்கு சமைப்பது போல் சமையுங்கள் மா’’ என அன்போடு கூறி சென்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications