அட நீங்களே பாருங்களேன்...கைதேர்ந்த குதிரை வண்டிக்காரர்போல்...குதிரை வண்டி ஒட்டி அசத்திய அமைச்சர்!
கரூர்: கரூரில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சுமார் 500 மீட்டர் தூரம் குதிரை வண்டி ஒட்டி அசத்தினார்.
அமைச்சர் அச்சு, அசலாக தொழில் தெரிந்த குதிரை வண்டிக்காரன் போல குதிரை வண்டி ஒட்டியது குதிரை வண்டிக்காரர்களை, அ.தி.மு.க.வினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கரூரில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் குதிரை வண்டியை ஓட்டுமாறு எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் தெரிவித்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு குதிரை வண்டியை தானாக ஒட்டிச் சென்றார். வருகிற 17-ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பாக குதிரை பந்தயம் நடைபெறுவதை ஒட்டி அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குதிரை வண்டிகள் வந்த வண்ணம் இருந்தன.

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அதிமுக நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று குதிரை வண்டியை தானாக சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு குதிரை வண்டியை ஓட்டினார்.#MRVijayabaskar #Karur #Admk pic.twitter.com/VvZ0XcsyOE
— Oneindia Tamil (@thatsTamil) January 15, 2021
இந்த நிலையில்தான் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஷ் (எ) முத்துக்குமார் வேண்டுகோளை ஏற்று குதிரை வண்டியை தானாகவே அமைச்சர் ஓட்டினார். அவர் அச்சு, அசலாக தொழில் தெரிந்த குதிரை வண்டிக்காரன் போல குதிரை வண்டி ஒட்டியது குதிரை வண்டிகாரர்களை, அ.தி.மு.க.வினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications