தேவையில்லாத சங்கடங்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை.. எம்பி ஜோதிமணி புகார் குறித்து அமைச்சர்
கரூர்: தேவையில்லாத சங்கடங்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை என கரூர் எம்பி ஜோதிமணி புகார் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
கரூர் கலைஞர் அறிவாலயத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது., கரூர் மாவட்ட அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது.

3 நாட்கள்
காங்கிரஸ் கொடுத்த பட்டியல் மற்றும் நாங்கள் கொடுத்த பட்டியல் என ஆலோசித்து இன்னும் போட்டியிடும் இடங்கள் இறுதி செய்யப்படவில்லை. மேலும், 3 நாட்களாக காங்கிரஸ் மாவட்ட தலைவரிடம் இடங்கள் குறித்து பேசப்பட்டது. அவர்கள் தரப்பில் பொது வார்டுகளை கேட்கிறார்கள். சில முரண்பட்ட கருத்துகள் உள்ளன.

சுமூக உடன்படிக்கை
தலைமையிடம் இது குறித்து நாங்கள் பேசி இருக்கிறோம் என்று கூறிய மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகார் குறித்து தற்சமயம் பேச விரும்பவில்லை. ஆகவே, எங்கள் தலைமையில் இருந்து காங்கிரஸ் தலைமையிடம் பேசி உள்ளனர். விரைவில் சுமூக உடன்படிக்கை ஏற்படும்.

சுமூகமாக பேசி
கூட்டணியில் தேவையில்லாத சங்கடங்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் தவிர கரூரில் மற்ற கூட்டணி கட்சியினருடன் சுமூகமாக பேசி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார். மேலும், விரைவில் வேட்பாளர் பட்டியல் தலைமையின் ஒப்புதலுடன் வெளிவரும் என்று செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

திமுகவினர் கருத்து
கரூர் திமுக அலுவலகத்தில் எம்பி ஜோதிமணியிடம் கலந்து ஆலோசிக்காமல் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி இதுகுறித்து கேட்டதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும் படி திமுகவினர் கூறியதாகவும் ஜோதிமணி எம்பி குற்றம்சாட்டினார்.

கூட்டணி தர்மமா
அப்போது ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஜோதிமணி, தன்னை வெளியேற சொல்வதுதான் திமுகவின் கூட்டணி தர்மமா? இதுதான் திமுகவில் பெண்களுக்கு தரும் மரியாதையா என ஆவேசமாக பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் சிலர் கூறுகையில் தேர்தல் விவகாரத்தில் எம்பி ஜோதிமணி தனித்து செயல்படுகிறார் என புகார் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications