ஐடி பார்க் முதல் மேட் இன் கரூர் வரை.. அமைச்சர் செந்தில் பாலாஜி அசத்தல் அறிவிப்பு.. பொதுமக்கள் ஹேப்பி
கரூர்: கரூரில் வளர்ச்சி பணிகளுக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பட்டியலிட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இது குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறையினருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ளன தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கினார்.

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
இந்த நிகழ்ச்சியில் ஐம்பது இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். காலை 10 மணிக்கு முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் வரை பலரும் பங்கேற்றனர். இந்த முகாமில் 100 நிறுவனங்களில் உள்ள 5000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு பயிற்சி முதல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் வரை பல்வேறு சிறப்பம்சங்கள் இம்முகாமில் இடம்பெற்றுள்ளன.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டில் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கோடு முதல்வரின் முயற்சியால் பல்வேறு நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும்.

கரூரில் ஐடி பார்க்
இங்கு வந்து இருக்கிறவர்களுக்கு அரசு வேலைக்குச் செல்லவேண்டும் என்று எண்ணம் இருக்கும் இதற்கான தீர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நமக்கு உருவாக்கித் தருவார்கள். அதற்கு நாங்கள் உங்களுடன் துணை நிற்போம். உங்கள் அரசு வேலையில் சேரும் நாட்கள் மிக விரைவாக அமையும். கரூர் மாவட்டத்தில் புதிய ஐடி பார்க் அமைப்பதற்கான வேண்டுகோள் முதல்வரிடத்தில் வைக்கப்படும். இதன் மூலமாகக் கரூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் சொந்த மாவட்டத்திலேயே ஐடி துறையில் பணிபுரியும் வாய்ப்பை முதல்வர் ஏற்படுத்தித் தருவார்கள்.

புதிய சிப்காட் பூங்கா
இங்கு விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களுக்குச் செல்ல ஆகும் செலவை நாங்கள் ஏற்போம் என ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதேபோல அடிப்படை கல்வி தொடர்பான செலவுகளையும் ஏற்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஜவுளி நகரமான கரூரில் 10 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் அதை 25 ஆயிரம் கோடியாக உயர்த்தும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா அமைப்பதற்கான ஆணையினை முதல்வர் வழங்கியுள்ளார்.

மேட் இன் கரூர்
Made in china என்பதை, Made in india என்று மாற்ற வேண்டும் என முதலில் கூறினோம். இப்போது Made in Tamilnaduஐ என்று உருவாக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். இதற்குத் தேவையான உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே Made in Karur என்று உலகம் முழுவதும் பேசும் அளவுக்கு நாம் திறம்படச் செயல்பட வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications