கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"படித்த முட்டாள்.. புரியலைனா கேட்டு தெரிஞ்சுக்கணும்.!" அண்ணாமலை பற்றி கேட்டதும் சீறிய செந்தில்பாலாஜி

Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழக அரசின் திட்டங்கள் ஏழை கிராமப்புற மாணவர்களின் கல்வியை உறுதி செய்கிறது.

கிராமப்புற மாணவர்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் பள்ளி சென்று கல்வி கற்க, முந்தைய அரசு கொண்டு வந்த திட்டம் தான் விலையில்லா மிதிவண்டிகள் திட்டம்.

உண்மையை உடைத்துப் பேசிய கே.என்.நேரு! தர்ம சங்கடத்தில் செந்தில்பாலாஜி! என்ன தான் பிரச்சனை? உண்மையை உடைத்துப் பேசிய கே.என்.நேரு! தர்ம சங்கடத்தில் செந்தில்பாலாஜி! என்ன தான் பிரச்சனை?

 விலையில்லா மிதிவண்டிகள்

விலையில்லா மிதிவண்டிகள்

இது கிராமப்புற மாணவர்கள் எளிதாகப் பள்ளி சென்று வர உதவுகிறது. பொதுமக்களிடையே பெரியளவில் வரவேற்பு பெற்ற இந்தத் திட்டத்தை தற்போதைய அரசும் தொடர்கிறது. இந்த கல்வியாண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. கரூரில் மொத்தம் 67 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

கரூர்

கரூர்

அங்கு 2021-2022ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற 4019 மாணவர்கள், 4458 மாணவிகள் உட்பட மொத்தம் 8477 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மொத்தம் ரூ. 4 .30 கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். மிதிவண்டிகளை அவர் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

 பாஜக விமர்சனம்

பாஜக விமர்சனம்

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மேயர், துணை மேயர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்துத் துறையில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யச் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்து இருந்தது இதை உச்ச நீதிமன்றம் ரத்து செய் நிலையில், இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று கரூர் மாவட்ட பாஜக தலைவர் விமர்சித்து இருந்தார்.

 அண்ணாமலை

அண்ணாமலை

இது குறித்த கேள்விக்குச் செய்தியாளர்களிடம் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள சரத்துகளை தெளிவாகப் படித்துப் பார்க்க வேண்டும். படித்துப் பார்க்கத் தெரியவில்லை என்றால் படித்த வழக்கறிஞர் ஒருவரிடம் அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வேலை வெட்டி இல்லாத நபர்.

 படித்த முட்டாள்

படித்த முட்டாள்

அவர் படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டிக் கொள்வார். அவரைப் போலவே அவரது கட்சியின் மாவட்ட தலைவரும் செயல்படுகிறார். ஏற்கனவே விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50,000 மின் இணைப்புகள் இன்னும் இரண்டு வாரக் காலத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

English summary
Senthilbalaji slams BJP and Annamalai over high court verdicts: Senthilbalaji latest press meet in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X