கிளம்பு கிளம்பு அந்துபோச்சு! ஒரு புடி மண்ண அள்ள முடியாது! செந்தில்பாலாஜி ஆதரவாளர் சர்ச்சை போஸ்டர்!
கரூர்: கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கிளம்பு கிளம்பு அந்து போச்சு என்றும் இது காலா கில்லா எனவும் வாசகம் அச்சிடப்பட்டுள்ள போஸ்டரில் இங்க இருந்து ஒரு புடி மண்ண கூட எடுத்துகிட்டு போக முடியாது என வருமான வரித்துறையினரை மிரட்டும் வகையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
காலா திரைப்படத்தில் வரும் ரஜினிகாந்த் கெட்டப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமர்ந்திருப்பது போன்றும் அவருக்கு அருகே புலி ஒன்று உருமிக் கொண்டு நிற்பதை போன்றும் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றும் வரும் காட்சிகளை பார்த்தால் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பல ட்விஸ்ட்கள் இருக்கின்றன. ரகசிய காப்பு உறுதிமொழி ஏற்று அமைச்சராக உள்ள ஒருவரை இது போல் சித்தரித்ததோடு மட்டுமல்லாமல் வருமான வரித்துறையினரை மிரட்டும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் செந்தில்பாலாஜிக்கு தான் நெருக்கடி ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கரூர் திருமாநிலையூரை சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே வருமான வரித்துறையினரை அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் ஆதரவாளர்கள் தாக்கிய விவகாரம் பூதாகரமாகி டெல்லி வரை எதிரொலித்துள்ளது.

இந்நிலையில் இது போன்ற போஸ்டர்கள் வருமான வரித்துறை உயர் அதிகாரிகளை மேலும் கோபப்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள் செய்யும் காரியங்களால் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அவரது தம்பி அசோக்கிற்கும் தான் பின்னாட்களில் பெரும் தலைவலியாக அமையும்.
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா முடிந்ததும் டெல்லியிலிருந்து வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் சிலர் தமிழகம் வரவுள்ளதாகவும் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டின் பிடியை மேலும் இறுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications