நீங்களும் நானும் ஒன்னுதான்.. மறந்து விடாதீர்கள்.. எடப்பாடி பழனிச்சாமியை வாரிய செந்தில் பாலாஜி
Recommended Video

கரூர்: தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார் என திமுகவில் அண்மையில் இணைந்த செந்தில் பாலாஜி பேசினார்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியில் இணையும் விழாவுக்கு செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.
கரூர் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் வழியில் உள்ள செந்தில் பாலாஜி பேசுகையில் தமிழகத்தில் வர விருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் தகுதிப்படைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த 5 ஆண்டுகளில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள தம்பிதுரை எந்த திட்டத்தையும் செய்யவில்லை.

சூளூரை
2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிதான் தம்பிதுரையின் கடைசி வெற்றி. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் யாரை இந்த தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை வெற்றி பெறச் செய்வோம் என சூளூரைப்போம்.

விவசாயம்
கரூர் மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டசபை தொகுதிகளிலும் ஸ்டாலின் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம். கூவத்தூரில் முட்டி போட்டு முதல்வரானாவர் பழனிச்சாமி. நானும் என்னுடன் இருந்த 5 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிச்சாமிக்கு ஓட்டு போடாமல் இருந்திருந்தால் அவர் என்றைக்கோ விவசாயம் பார்க்க போயிருப்பார்.

பதவியேற்றோம்
ஆனால் இன்னிக்கு தேசத்தில் ஏதோ நன்மை செய்துவிட்டார் போல் பேசுகிறார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, நீங்கள் வேண்டுமானால் 4 முறை சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கலாம். ஆனால் நீங்களு்ம நானும் ஒரே நாளில்தான் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டோம். வரலாறை மறந்துவிட்டு பேச வேண்டாம்.

விலகி
எடப்பாடி பழனிச்சாமி அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்தித்து வாக்கு கேட்டு முதல்வர் நாற்காலியில் அமரட்டும். நான் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன். இல்லையென்றால் நீங்கள் அரசியலை விட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

ஸ்டாலினால் மட்டுமே முடியும்
கூவத்தூரில் குறுக்குவழியில் படி போட்டதால் முதல்வர் பதவியில் உட்கார்ந்துள்ளார் எடப்பாடி. தமிழக மக்களுக்கு எடப்பாடி துரோகத்தை தவிர வேறு எதையும் செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம், தங்கமணி, வேலுமணி, தம்பிதுரை ஆகியோர் தங்கள் மீது வழக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே தமிழக மக்களின் நலன்களை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளனர். தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்றார்.
-
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications