எட்டி பார்க்காத விஜய்.. காயமடைந்தவர்களின் வீட்டிற்கு சென்று நிவாரணம் வழங்கினார் செந்தில் பாலாஜி!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று நிவாரண தொகையை பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கியுள்ளார்.

கடந்த 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அவரை பார்க்க ரசிகர்கள், தொண்டர்கள் அதிக அளவில் குவிந்திருந்த நிலையில், திடீரென நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அன்றைய தினமே நிவாரணமும் வழங்கப்பட்டது.

Senthil Balaji Karur Karur stampede

அதேபோல காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. இதனையடுத்து காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை நேரில் சென்று சந்தித்த செந்தில் பாலாஜி, அரசு அறிவித்த ரூ.1 லட்சம் நிவாரண தொகையை வழங்கியுள்ளார்.

கரூர் சம்பவம் நடந்த இரவு முழுவதும் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் முகாமிட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும், எந்த கட்டணமும் பெறாமல் உடனடியாக தேவையான சிகிச்சைகளை வழங்க உத்தரவிட்டிப்பட்டிருப்பதையும் அவர் உறுதி செய்திருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுதல், சிகிச்சையை உறுதி செய்தல், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவி என பம்பரமாய் சுற்றி பணியாற்றியிருந்தார்.

ஆனால் மறுபுறம், சம்பவம் நடந்த அடுத்த ஓரிரு மணி நேரங்களில் விஜய் சென்னைக்கு செல்ல திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் விமான நிலையம் வந்து சேர்வதற்குள் உயிரிழப்பு எண்ணிக்கை 30ஐ தாண்டியிருந்தது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். ஆனால் விஜய் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்னை புறப்பட்டு சென்றார். சென்னை சென்று சேர்ந்த பின்னர் மனம் கணக்கிறது என்று ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு நேர்மாறாக, கரூரில் மொத்த காவல்துறையும் குவிந்திருந்தது. மாவட்ட நிர்வாகம், கரூரை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. முதலமைச்சர் நள்ளிரவு புறப்பட்டு கரூர் வந்தடைந்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத்தையும் வழங்கினார். ஆனால் சிலர் உள்நோளக்கத்துடன், முதல்வர் ஏன் வந்தார்? செந்தில் பாலாஜி எப்படி வந்தார் என்று சந்தேக கண் கொண்டு பார்த்து கேள்வி எழுப்பினர். ஆனால், விஜய் ஏன் குறிப்பிட்ட நேரத்திற்கு கூட்டத்திற்கு வரவில்லை? என்று அவர்களால் கேள்வி எழுப்ப முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+