தாயின் சம்பளம் வாங்க வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை! டாக்டரை கைது செய்யாதது ஏன்? கரூர் பரபரப்பு!
கரூர் : கரூரில் தன்னிடம் பணிபுரியும் பெண் ஊழியரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் இன்னும் கைது செய்யப்படாதது பல்வேறு சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
கரூரில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டரும் அந்த மருத்துவமனையின் மேலாளரும் மருத்துவமனை பெண் ஊழியரின் மகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்த நிலையில் மேலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் டாக்டர் மீது வழக்குப்பதியப்பட்டாலும் வேறு எந்த சட்ட நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை.

எலும்பு முறிவு மருத்துவரான டாக்டர் ரஜினிகாந்த் கரூரில் உள்ள பிரதான சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரிடம் பெண் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். தாய் அந்த மருத்துவமனையில் பணிபுரிவதால் அவரது மகள் பள்ளி முடிந்தவுடன் மருத்துவமனைக்கு வருவார். பின்னர் அங்கிருந்து இருவரும் வீட்டிற்கு செல்வார்கள். இந்நிலையில் பெண் ஊழியருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறிது நாட்களாக மருத்துவமனைக்கு பணிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. தான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் சம்பளப் பணத்தை வாங்கி வருமாறு மகளை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். கடந்த 13ம் தேதி அந்த மாணவி மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்த டாக்டர் ரஜினிகாந்த் மாணவியை தனி அறைக்கு சென்றுள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடவே பயந்து போன மாணவி அலறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்திற்கு மருத்தவமனை மேலாளர் சரவணனும் உடந்தை எனக் கூறப்படுகிறது.
தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் சொல்ல உடனடியாக தாய் காவல்நிலையத்திற்கு சென்று டாக்டர் மீது புகார் அளித்தார். பிரச்சனை ஊடகங்கள் மூலம் விஸ்வரூபம் எடுக்க வேறு வழியின்றி ரஜினிகாந்த் மற்றும் மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது, கரூர் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விஷயம் ஊடக வெளிச்சத்திற்கு வந்தால் தன்னுடைய மானம் மரியாதை போய்விடும் என்பதை அறிந்த ரஜினிகாந்த் அங்கிருந்து தலைமறைவானார். ஆனால் போலீஸ் விரித்த வலையில் மேலாளர் சரவணன் சிக்கிக் கொண்டார்.
இந்நிலையில் புகார் பதிந்து இத்தனை நாட்கள் ஆகியும் தலைமறைவாக உள்ள டாக்டர் ரஜினிகாந்த்தை போலீசார் தேடாததும், கை செய்யாததும் பல்வேறு தரப்பினருக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இதனால் டாக்டருக்கு திமுகவினருடன் தொடர்பு இருக்குமோ அவர்கள் ஆதரவுடன்தான் டாக்டர் தலைமறைவாக இருப்பாரோ என்ற சந்தேகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டாக்டர் ரஜினிகாந்தை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்துவதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் காவல்துறை இருந்தும் இந்த விஷயத்தை ஆரப்போட நினைப்பது ஏன் என சமூக நல ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள் கேள்ளி எழுப்பத் தொடங்கி விட்டனர்.
இதுஒருபுறம் இருக்க கரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுகந்தி இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். அந்த வழக்கை தொடர புதிய ஆய்வாளர் நியமிக்கப்படாத நிலையில் வழக்கு கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவரும் பிஸியாக இருப்பதால் டாக்டர் ரஜினிகாந்தை உடனடியாக கைது செய்ய முடியவில்லை என, சக போலீசார் புலம்புகின்றனர்.
பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும் அந்த வழக்கு கிணற்றில் போட்ட கல் போல அமைதியாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை அதிமுக அரசு தண்டிக்கவில்லை என அப்போதைய எதிர்க்கட்சியான திமுக குற்றம்சாட்டி வந்தது. கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கூட குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணி வருகிறார்கள். இப்போது கரூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததாக டாக்டர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தற்போதைய ஆளும்கட்சியினர் உதவுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
10 ரூபாய் பிக்பாக்கெட் அடித்தாலே குற்றவாளிகளை பிடித்து முட்டிக்கு முட்டி தட்டி எலும்பை எண்ணிவிடும் போலீஸார் பலருக்கு உடைந்து போன எலும்புகளை ஒட்ட வைத்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
நம்முடைய போலீசார் எப்போதுமே ஸ்காட்லாந்துக்கு இணையான போலீஸ் என்பதை மறந்துவிடக்கூடாது என்று கூறிக்கொண்டு......
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications