கரூர் களத்தில் இறங்கிய சிபிஐ அதிகாரிகள்.. ஆவணங்களை ஒப்படைத்தது எஸ்.ஐ.டி.. உடனடியாக விசாரணை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தது எஸ்.ஐ.டி. விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சில நாட்களுக்கு முன்பு சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள், வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டனர்.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

karur cbi vijay

சிறப்பு புலனாய்வுக் குழு

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. அதேபோல, அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ மற்றும் சாலைப் பிரச்சாரங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுகளை எதிர்த்து தவெக தரப்பில் ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் பிச்சைமுத்து, எஸ்.பிரபாகரன், செல்வராஜ், பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த வார இறுதியில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அமர்வில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது.

சிபிஐக்கு மாற்றம்

உயிரிழப்பு சம்பவத்தில் நியாயமான, உண்மையான, பாரபட்சமற்ற, வெளிப்படையான, சுதந்திரமான விசாரணையை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. எனவே, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் அடங்கிய கண்காணிப்பு குழுவையும் அமைக்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிபிஐ இயன்ற அளவுக்கு விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும். கண்காணிப்புக் குழு மற்றும் சிபிஐ அதிகாரிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர, மூத்த அதிகாரி ஒருவரை நோடல் அதிகாரியாக தமிழக அரசு நியமிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு 8 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கரூரில் சிபிஐ

தமிழக அரசு நியமித்த ஒருநபர் ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு உடனடியாக கலைக்கப்படுகிறது. அவர்கள் இதுவரை நடத்தி சேகரித்த அனைத்து ஆதாரங்கள், டிஜிட்டல் ஆவணங்களையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். அதேபோல, கரூர் எஸ்.பி. மற்றும் கரூர் டவுன் காவல் ஆய்வாளர் பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளையும் சிபிஐக்கு வழங்கி, சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கரூர் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய ஆறு பேர் கொண்ட குழுவினர் இரு கார்களில் வியாழக்கிழமை நள்ளிரவு கரூருக்கு வருகை தந்தனர்.

ஆவணங்கள் ஒப்படைப்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளனர். இந்தக் குழுவினர் நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிபிஐ அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவின் வசம் உள்ள ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள், எஸ்.ஐ.டி அதிகாரிகளிடம் வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். இன்றோ நாளையோ விசாரணையை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+