அடுத்த நாங்குநேரி? ஊருக்குள் புகுந்து பட்டியலின மாணவன் மீது தாக்குதல்! பாட்டியையும் விடாத மாணவர்கள்
கரூர்: நாங்குநேரியில் பட்டியலின மாணவனையும், அவரது தங்கையும் பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டினர். அதேபோல் தற்போது கரூரில் பட்டியலின மாணவனையும், அவனது பாட்டியையும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஊருக்குள் நுழைந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த 17 வயது நிரம்பிய சின்னத்துரையிடம் சாதிபாகுபாடு காட்டி துன்புறுத்தினர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் துன்புறுத்திய மாணவர்களை கண்டித்தது.

இதையடுத்து சில மாணவர்கள் சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. மேலும் தடுக்கப்போன அவரது தங்கை சந்திரா செல்வியையும் வெட்டியது. இருவரும் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
சாதி பாகுபாட்டால் பட்டியலினத்தை சேர்ந்த அண்ணன்-தங்கை மீது நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த வழக்கில் 5க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தான் இன்னொரு பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவரையும், அவரது பாட்டியையும் சில மாணவர்கள் தாக்கிய சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது.
அதாவது கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அருகே வசித்து வருபவர் 10ம் வகுப்பு மாணவர். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தனது பாட்டியுடன் வசித்து கொண்டு உப்பிடமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நியைில் தான் திடீரென்று ஊருக்குள் நுழைந் கும்பல் அந்த மாணவர் மற்றும் அவரது பாட்டியை விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கிவிட்டு ஓடியது. இதில் 10ம் வகுப்பு மாணவரும், அவரது பாட்டியும் காயமடைந்தனர்.
இதையடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே தான் பட்டியலின மாணவர் மற்றும் அவரது பாட்டி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதில் தாக்குதல் நடத்தியவர்களின் முகங்கள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் 2 கல்லூரி மாணவர்கள் மற்றும் 2 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்தியதன் பின்னணி காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.
அதாவது தாக்குதலுக்கு உள்ளான பட்டியலின மாணவர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தான் புலியூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கும், பட்டியலின மாணவருக்கும் பஸ்சில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமாக கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து 12ம் வகுப்பு மாணவர்கள் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது பாட்டியை தாக்கியது தெரியவந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications