சட்டசபை தேர்தல் காங். தோல்விக்கு காரணம் 'சனாதன தர்ம' பேச்சுதானா? நடந்தது என்ன? உதயநிதி விளக்கம்!
கரூர்: சனாதன தர்ம ஒழிப்பு பேச்சை 'இனப் படுகொலை' என திரித்து பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ததாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பாஜக கைப்பற்றியது.

வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் மிகப் பெரும் தோல்வியைத் தழுவியதற்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என ஒருநாள் பேசியதுதான் காரணம் என காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் நேற்று முதலே விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியதாவது: சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா, கொரோனாவை உருவாக்கும் கொசுக்கள், வைரஸ் போன்றது. அதை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தேன். ஆனால் பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர், சனாதன தர்மத்தை பின்பற்றுவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதாக திரித்து தேர்தல் பிரசாரம் செய்தனர்.
சில சாமியார்கள் என் தலைக்கு ரூ5 கோடி முதல் ரூ10 கோடி வரை விலை வைத்தனர். இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். சனாதன தர்மம் ஒழிப்பு பேச்சுக்காக என்னை மன்னிப்பு கேட்க சொன்னார்கள். ஆனால் இந்த பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது. நான் முதல்வர் ஸ்டாலின் மகன்; கருணாநிதியின் பேரன். என்னுடைய தத்துவத்தை, கொள்கையைத்தான் பேசினேன். அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என கூறிவிட்டேன் என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். ஆனால் பாஜகவின் ஐடி விங் தலைவர் அமித் மாள்வியா, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். யூதர்களை ஹிட்லர் இனப்படுகொலை செய்தது போல உதயநிதி பேசிவிட்டார் என பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனையே பிரதமர் மோடி உள்ளிட்டோரும் தீவிரமாக பிரசார ஆயுதமாக கையில் எடுத்தனர். வட இந்திய மாநில காங்கிரஸ் தலைவர்களான கமல்நாத் உள்ளிட்டோரும் உதயநிதி பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications