டென்ஷனான தேஜஸ்வி சூர்யா.. "உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரோம்!" கரூர் சம்பவத்தில் பரபரப்பு
கரூர்: விஜய் பிரச்சாரத்தில் காயமடைந்தோரை நேற்றைய தினம் என்டிஏ எம்பிக்கள் குழு சந்தித்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்தும் நேரில் பார்த்தவர்களிடம் கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் எம்பி தேஜஸ்வி சூர்யா, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
கரூரில் கடந்த வாரம் விஜய் பிரச்சாரத்தின்போது மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது. பிரச்சாரம் நடந்த இடத்திற்கு வந்தபோது திடீரெனக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த மிக மோசமான துயரம் தொடர்பாகத் தெரிந்து கொள்ள பாஜக தலைவர் நட்டா, 8 எம்பிக்களை கொண்ட உண்மை அறியும் குழுவை அமைத்திருந்தார்.

என்டிஏ குழு
இந்தக் குழு நேற்று கரூருக்கு வந்தது. பல்வேறு தரப்பினரையும் சந்தித்து என்ன நடந்தது என்பதைக் கேட்டறிந்தது. பாதிக்கப்பட்ட மக்கள், உயிரிழந்தோரின் குடும்பத்தினர் எனப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்தனர். அதைத்தொடர்ந்து கரூரிலேயே வைத்து செய்தியாளர்களையும் சந்தித்து கேள்விகளை எழுப்பினர்.
தேஜஸ்வி சூர்யா
இது தொடர்பாக பெங்களூர் எம்பி தேஜஸ்வி சூர்யா கூறுகையில், "இந்தச் சம்பவம் நடந்த பிறகு, பாதிக்கப்பட்டவர்களை ஏன் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை? தனியார் மருத்துவமனை மிக அருகிலேயே இருந்தது. ஆனால், அதை விட்டுவிட்டு 25 நிமிடப் பயணத் தூரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஏன்?
காயமடைந்தோரை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் பலரது உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும், இதில் காயமடைந்தோரும் தெரிவித்தனர். தொலைவில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குக் காயமடைந்தோரை அழைத்துச் சென்றது ஏன் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
தமிழக அரசு
தேஜஸ்வி சூர்யாவின் இந்தக் கருத்துகள் இணையத்தில் வேகமாகப் பரவியது. தேஜஸ்வி சூர்யா மட்டுமின்றி நெட்டிசன்கள் பலரும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இதற்கிடையே தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. கரூர் கூட்டநெரிசலில் சிக்கியவர்களை அருகேயுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கவில்லை என்பது பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், "இது முற்றிலும் தவறான தகவல் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் 11 பேர், அருகேயுள்ள அக்ஷயா என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அங்கு 6 ஐசியு படுக்கைகள் மட்டுமே இருந்துள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்களும் அங்குச் சென்றுள்ளனர். அக்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி காசோலை மூலம் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமை மீறல் தீர்மானம்
தேஜஸ்வி சூர்யா மேலும் கூறுகையில், "இவை எல்லாம் மிகவும் தீவிரமான கேள்விகள். எனவே, இது குறித்து உள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க முயன்றோம். பல போன்கால், மெயில், லெட்டர் கொடுத்த பிறகும் எங்களைப் பார்க்க மறுத்துவிட்டனர். எனவே, எங்கள் குழுவில் இருக்கும் 8 எம்பிக்களும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். அவர்கள் நாடாளுமன்றக் குழுவைச் சந்திக்க மறுத்ததாலேயே உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்" என்று கூறியிருந்தார்.
கவனிக்க வேண்டும்
அதேநேரம் இங்கு நாம் மற்றொரு தகவலையும் கவனிக்க வேண்டும். அதாவது நேற்று கரூருக்கு வந்தது மத்திய அரசின் நாடாளுமன்ற விசாரணைக் குழு இல்லை. மாறாக அது பாஜகவின் என்டிஏ கூட்டணி அமைத்திருந்தது உண்மை அறியும் குழு தான். இந்தக் குழுவை அமைத்ததும் லோக்சபா சபாநாயகரோ அல்லது ராஜ்யசபா தலைவரோ அமைக்கவில்லை. மாறாக, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாதான் இந்தக் குழுவை அமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி











Click it and Unblock the Notifications