பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் செந்தில் பாலாஜி... அன்புமணி விமர்சனம்
அரவக்குறிச்சி: ராகுல் காந்தி பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து கந்தம்பாளையம் பகுதியில், அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை என்றார்.

நிறைவேறாது
ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை 100 முறை சொன்னாலும் அது நிறைவேறாது. ஆனால் முதலமைச்சர் ஒரு முறை சொன்னாலே அது நடக்கும்.
அ.தி.மு.க. தோற்க வேண்டும் என்பது தான் டி.டி.வி. தினகரனின் ஆசை. தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை.
ஆனால், எங்களது ஆசை என்னவென்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்க வேண்டும் என வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கிறது.

ஒரு போதும் நடக்காது
தேர்தல் பிரச்சாரங்களில், மு.க.ஸ்டாலின் எந்த வளர்ச்சியை பற்றியும் பேசவில்லை மாறாக என்னை, முதலமைச்சர், துணை முதலமைச்சர், மோடி ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார். ஆனால் நாங்கள் நாகரீக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம்.
ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது.

மிகுந்த குழப்பம்
இதனை தெரிந்து கொண்டு 3-வது அணிக்கு போகும் நோக்கில், சந்திரசேகரராவிடம் ஒரு மணிநேரம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் இருந்து மிகுந்த குழப்பத்தில் எதிரணி இருப்பது தெரிகிறது. ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார். அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறார்.

பதில் சொல்ல வேண்டும்
ஏன் தமிழ்நாட்டில் அவர் முதலீடு செய்யவில்லை? இதற்கு என்ன ஸ்டாலின் பதில் சொல்ல போகிறார் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications