‛ஆபாசம்’.. பெண் தலைவரை முகம் சுளிக்க வைத்த திமுக கவுன்சிலர்! நகராட்சி ஆபிஸில் இப்படியா செய்வாங்க?
கரூர்: கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியின் பெண் தலைவரிடம் திமுக கவுன்சிலர் ஒருவர் வேட்டியை தூக்கி காண்பித்து ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்டு பள்ளப்பட்டி நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் 18 பேர் திமுக கவுன்சிலர்கள். இதனால் இந்த நகராட்சி திமுக வசம் உள்ளது. திமுகவை சேர்ந்த முனவர் ஜான் என்ற பெண் கவுன்சிலர் நகராட்சி தலைவராக உள்ளார்.

துணை தலைவராக பஷீர் அகமது உள்ளார். இத்தகைய சூழலில் தான் நகராட்சி தலைவர் முனவர் ஜான் மீது தொடர்ந்து சில கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
நகராட்சிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை முறையாக செய்வது இல்லை. வார்டு கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதில் முரண்பாடு காட்டுவதாக சில கவுன்சிலர்கள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் தான் கடந்த 27 ம் தேதி நகராட்சி கூட்டம் முடிந்தது.
இந்த கூட்டத்துக்கு 3வது வார்டு கவுன்சிலர் நத்தம் ஜாபர், 9 வது வார்டு கவுன்சிலர் அப்புகாரத்த சாதிக் ஆகியோர் நகராட்சி தலைவர் முனவர் ஜான் அறைக்கு சென்று வாக்குவாதம் செய்தனர். அதேபோல் நகராட்சி ஆணையரையும் அவர்கள் விமர்சனம் செய்தனர்.
அதோடு, ‛‛உங்களால் எங்கள் வார்டுகளில் வளர்ச்சி பணி மேற்கொள்ள முடியவில்லை. அதோடு மக்கள் எங்களை திட்டுகிறார்கள். நீங்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்'' என்று கூறினார். அதற்கு அவர், ‛‛பெண்ணாக இருக்கும் என்னிடம் அசிங்கமாக பேசுகிறீர்களே? இது நியாயமா?'' என கூறினார். இதையடுத்து நத்தம் ஜாபர், அப்புகாரத்த சாதிக் ஆகியோர் நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.
இந்த வேளையில் முனவர் ஜானும் நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது இரு கவுன்சிலர்களும் மீண்டும் அவரிடம் வாக்குவாதம் செய்தார். ‛‛நீங்கள் கொள்ளையடிப்பீர்கள். அதனை நாங்கள் பார்த்து கொண்டு இருப்பதா..'' என கெட்டவார்த்தைகளை பேசினர். இந்த வேளையில் நகராட்சி தலைவி முனவர் ஜான் அவரது ஆதரவு கவுன்சிலர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.
அப்போது கோபத்தின் உச்சிக்குப்போன கவுன்சிலர் அப்புகாரத்த சாதிக் திடீரென்று தனது வேட்டியை தூக்கி காண்பித்து ஆபாசமாக நடந்து கொண்டார். அதோடு ‛‛துவைச்சி எடுத்துவிடுவேன்'' என வாக்குவாதம் செய்தார். இது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications