பயமா? அடுத்தது இதுதான்! கரூரில் ஐடி அதிகாரிகள் மீதான ‛அட்டாக்’ பற்றி வருமான வரி அதிகாரி பரபர தகவல்
கரூர்: கரூரில் வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் 4 அதிகாரிகள் காயமடைந்த நிலையில், இந்த ‛அட்டாக்' மற்றும் வருமான வரித்துறையினருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதால் அச்சமடையமாட்டோம் எனவும், அடுத்து என்ன நடக்கும் எனவும் வருமான வரித்துறை புலனாய்வு இயக்குநர் சிவசங்கரன் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக், அவரது உறவினர்கள், நண்பர்கள், செந்தில்பாலாஜி தொடர்புடைய ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

சென்னை, கோவை, கரூர் மாவட்டங்களில் மொத்தம் 40க்கும் அதிகமான இடங்களில் இந்த சோதனை தொடங்கியது. இன்று 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று முன்தினம் கரூரில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் உள்பட சிலரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர்.
அப்போது திமுகவினர் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களின் கார்களை சேதப்படுத்தினர். மேலும் அதிகாரிகளை தாக்கினர். இதில் 4 அதிகாரிகள் காயமடைந்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதலாக போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வருமான வரித்துறையினர் அளித்த புகாரில் திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுகவினர் அளித்த புகாரில் வருமான வரி அதிகாரி மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த 4 வருமான வரி அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இன்று அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகினர்.
முன்னதாக காயமடைந்த அதிகாரிகளை சென்னை வருமான வரி புலனாய்வுப்பிரிவு இயக்குநர் சிவசங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நடந்த சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார். இதுபற்றி சிவசங்கரன் கூறியதாவது: சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை அங்கிருந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். வருமான வரி ஆய்வாளர் காயத்ரி உள்ளிட்ட 2 பேருக்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் வேண்டுமென்றே அடித்துள்ளனர். இதுகுறித்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் ஆதாரங்களை அழித்தவர்கள் மீது காவல் துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக வருமான வரித்துறை அதிகாரி, அவர்களை தாக்கியதற்கான ஆதாரம் இருந்தால் காட்டட்டும். கரூரில் என்ன நடந்தது? என்பது அனைத்தும் ஊடகங்களுக்கு தெரியும். அனைவருக்கும் தெரிந்தே இந்த சம்பவம் நடந்துள்ளது.
நாங்கள் புகார் கொடுத்ததற்காக, அவர்களும் திருப்பி புகார் கொடுத்தால் கொடுக்கட்டும். அதற்காக நாங்கள் அஞ்ச மாட்டோம். வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தொகை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள்'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications