குளித்தலைக்கு பயங்கர குஷி.. பழைய காசுக்கு கோழி பிரியாணி & வித் முட்டை.. கரூர் ரோட்டில் செம டிராபிக்
கரூர்: பிரியாணி வாங்க ஆசை ஆசையாக கிளம்பி சென்றுள்ளார்கள் பொதுமக்கள்.. ஆனால், போலீஸ்வரை விவகாரம் சென்றுவிட்டது. என்ன நடந்தது கரூரில்?
நம்முடைய ஊரில் 10 ரூபாய் காயின் என்றாலே, அது செல்லாத நாணயம்போல பலரும் கருதும்படி ஆகிவிட்டது.. தமிழகத்தைவிட புதுச்சேரியில் நிலைமை இன்னும் மோசம்.. 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் யாருமே வாங்குவதேயில்லை.. இதனால், புதுச்சேரியில் 10 ரூபாய் பெருமளவில் பயன்பாட்டிலும் இல்லை.

ஆபர் அறிவிப்பு: அதனால்தான், "புதுச்சேரி மக்களால் வாங்க மறுக்கப்படும் 10 ரூபாய் நாணயம் செல்லும்" என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் ஓட்டல் நிர்வாகம் ஒன்று கடந்த மாதம், ஸ்பெஷல் ஆஃபர் அறிவித்திருந்தது.
புதுச்சேரி நகர பகுதியில் அதாவது, புஸ்சி வீதி, பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகில் அமைந்துள்ள இந்த ஓட்டலில் காணும் பொங்கலன்று, 10 ரூபாய் நாணயத்துக்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற ஸ்பெஷல் ஆஃபர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை பார்த்ததுமே, புதுச்சேரி மக்கள் ஆர்வத்துடன் அந்த ஓட்டலுக்கு படையெடுத்தனர்..
பாதுகாப்பு: மதியம் 12 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் ஓட்டல் முன்பு திரண்டதால், கூட்ட நெரிசல் அதிகமாகிவிட்டது.. முன்கூட்டியே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.. 1 கிமீ தூரத்துக்கு வரிசைகட்டி நின்றனர்..
வெறும் அரை மணி நேரத்தில், மொத்தம் 500 பேருக்கு பிரியாணி பொட்டலத்தை ஓட்டல் நிர்வாகம் வழங்கியது.. இதனால், 2 மணி நேரமாக வரிசையில் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடையவும், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்...
10 ரூபாய்: ஓட்டல் நிர்வாகத்தின் இந்த ஸ்பெஷல் பிரியாணி அறிவிப்பினால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது என்றாலும், இந்த 10 ரூபாய் காயின் விழிப்புணர்வு முயற்சி, புதுச்சேரி மக்களால் பாராட்டை பெற்றது. இதுபோலவே, ஒரு பிரியாணி ஆஃபர் குளித்தலையில் நேற்று நடந்துள்ளது.. ஆனால், போலீஸ் வரை புகார் போய்விட்டது விவகாரம்..
கரூர் மாவட்டம் குளித்தலையில், கரூர் - திருச்சி பழைய நெடுஞ்சாலைக்கு அருகே ஆர்.ரஹ்மான் திண்டுக்கல் பிரியாணி என்ற பெயரில் புதிய கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.. வழக்கமாக புது கடை திறக்கப்பட்டால், அதை பிரபலப்படுத்துவதற்காக, சில சலுகைகள் வெளியாகும்.. அதன்படிதான், "உணவுத் திருவிழா" என்ற பெயரில் 3 நாட்களுக்கு பிரியாணி திருவிழா இந்த கடையிலும் நடத்தப்பட்டது.
சிக்கன் பிரியாணி: அதில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையான ஒருநாள் மட்டும் 1 பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசாக்களில் ஏதேனும் ஒரு காசை கொடுத்தால் ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.. இதுதொடர்பான போஸ்டர்களும் ஊர் முழுக்க ஒட்டப்பட்டது.
இதெல்லாம் பயன்பாட்டில் இல்லாத பழைய நாணயங்கள் என்பதால், பொதுமக்களின் கவனத்தை இந்த விளம்பரம் வெகுவாக ஈர்த்தது.. அதனால், ஆங்காங்கே போஸ்டர்களை பார்த்த மக்கள், தங்களிடமிருந்த பழைய காசுகளை தேடி கண்டுபிடித்து கொண்டு, பிரியாணி கடை முன்பு நின்றார்கள்.
பழைய காயின்கள்: இதனால், குளித்தலை ரோட்டில் காலையிலேயே பொதுமக்கள் திரண்டுவிட்டனர்.. பிரியாணி மதியம்தான் தரப்படுகிறது என்றாலும், காலை 9 மணிக்கே பொதுமக்கள் திரண்டுவிட்டதால், முக்கிய சாலைகளில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.. அத்துடன், பிரியாணி வாங்குவதில் கடும் போட்டியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததுமே, குளித்தலை போலீஸார் விரைந்து சென்றார்கள்.. பொதுமக்களை கட்டுப்படுத்த முயன்றும் அவர்களால் முடியவில்லை.. அதனால், நேராக சென்று, அந்த கடையின் ஷட்டரை இழுத்து பூட்டிவிட்டார்கள்.. இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்..
நொந்து போன மக்கள்: "யாருக்கும் இங்கே பிரியாணி கிடையாது, எல்லாரும் கிளம்பி போங்க" என்று அவர்களிடம் போலீசார் அறிவுறுத்தினார்கள்.. காலையிலிருந்து கால் கடுக்க நிற்கிறோம்.. ஆனால், போதுமான முன்னேற்பாடுகளை கடை நிர்வாகம் செய்யவில்லையே என்று பிரியாணி கடை ஓனரை திட்டி தீர்த்தபடியே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.. ஆகமொத்தம், பிரியாணி கடைக்கு இதுவும் ஒரு விளம்பரமாகிவிட்டது.












Click it and Unblock the Notifications