சிஷ்யனை வீழ்த்த குருவை களமிறக்கும் எடப்பாடி? கரூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் யார்?
கரூர்: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவே நேரடியாக பேட்டியிட்டாலும் சரி அல்லது காங்கிரஸ் மீண்டும் களமிறங்கினாலும் சரி இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டம் கரூர் என்பதால் அங்கு திமுக கூட்டணியை வீழ்த்தும் வகையில் இப்போதே வலிமையான வேட்பாளரை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.

அந்த வகையில் கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரான சின்னச்சாமி ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. சின்னச்சாமியை பொறுத்தவரை ஏற்கனவே கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்திருக்கிறார். இதனால் தொகுதி முழுவதும் இவருக்கு அத்துப்படி. அதேபோல் அவர் சார்ந்த சமுதாய வாக்கு வங்கியையும் கணிசமாக கையில் வைத்துள்ளார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் ஜோதிமணி போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இதனால் தங்கள் வெற்றி எளிது என அதிமுகவினர் இப்போதே அதீத நம்பிக்கையுடன் வலம் வர ஆரம்பித்துள்ளனர். இதனிடையே தொகுதி முழுவதும் பழைய தொடர்புகளை புதுப்பிக்கும் பணிகளை சின்னச்சாமி தரப்பு முன்னெடுத்து வருகிறது. சின்னச்சாமியை பொறுத்தவரை செந்தில்பாலாஜி கொடுத்த குடைச்சலால் தான் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்றார்.
பிறகு செந்தில்பாலாஜி திமுகவுக்கும் வந்து குடைச்சல் கொடுப்பார் என்பதை முன்பே அறியாத அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று மீண்டும் அதிமுகவில் சேர்ந்துவிட்டார். இப்போது அவருக்கு உரிய அங்கீகாரத்தை எடப்பாடி பழனிசாமி கொடுத்து வருகிறார்.
செந்தில்பாலாஜி தரப்பு தேர்தலின் போது என்னென்ன வியூகங்களை வகுக்கும், வெற்றிக்காக எப்படியெல்லாம் காய் நகர்த்தும் என்பதை கரூர் சின்னச்சாமி அறியாதவர் அல்ல. இதனால் நீயா? நானா? என பார்த்துவிடுவோம் என்ற சவாலுடன் கரூரில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதனிடையே சின்னச்சாமியை தவிர இன்னும் ஒரு சில புதுமுகங்களையும் கரூர் தொகுதியில் களமிறக்க எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications