கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி, ஓபிஎஸ் சும்மா இருந்தாலும், தொடர்ந்து பாஜகவை தாக்கும் தம்பிதுரை.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    தொடர்ந்து பாஜகவை தாக்கும் தம்பிதுரை.. பின்னணி என்ன?- வீடியோ

    கரூர்: லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை, மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக தனது விமர்சனத்தை இன்றும் முன் வைத்துள்ளார்.

    கடந்த சில பேட்டிகளின்போதிருந்தே, தம்பிதுரை, மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ஒருபக்கம், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பாஜகவை விமர்சிக்காத நிலையில், மூத்த தலைவர்களில் தம்பிதுரை மட்டுமே இதை செய்து வருகிறார்.

    இதனால் அதிமுக கட்சிக்குள் ஒற்றுமை இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளளது.

    சர்காருக்கு எதிராக செங்கோலை உயர்த்திய பாக்யராஜ்.. அசால்ட்டாக செய்த ஒரு விரல் புரட்சி! சர்காருக்கு எதிராக செங்கோலை உயர்த்திய பாக்யராஜ்.. அசால்ட்டாக செய்த ஒரு விரல் புரட்சி!

    தம்பிதுரை தாக்கு

    தம்பிதுரை தாக்கு

    கரூரில் இன்று தம்பிதுரை பேட்டி அளித்தார். அப்போது அவர் மீண்டும் மத்திய அரசை தாக்கினார். அவர் கூறியதாவது: நிதியை வைத்துக்கொண்டு மாநில அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது. மத்திய அரசு, மாநில அரசை நகராட்சியாக மாற்றி விட்டது. காங்கிரஸ், பாஜக மாநில அரசின் அதிகாரங்களை பறித்து கொண்டன. மோடி நல்லவர். ஆனால், மாநில அரசின் நிதியை கொடுப்பது இல்லை. விளம்பரத்துக்காக மட்டுமே மத்திய அரசு திட்டங்களை அறிவிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது வேதனையாக உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

    தம்பிதுரை தாக்கு

    தம்பிதுரை தாக்கு

    இந்த பேட்டியிலும், மத்திய அரசை நேரடியாக தம்பிதுரை தாக்கி பேசியுள்ளதை கவனிக்க முடிகிறது. இதுகுறித்து சமீபத்தில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் இதை கண்டுபிடிக்க பத்திரிகையாளர்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்று பதிலளித்தார். மேலும், அரசியல் லாபத்திற்காக தம்பிதுரை இவ்வாறு பேசியிருக்க கூடும் என்றார் அவர்.

    அதிமுகவில் முக்கியத்துவம்

    அதிமுகவில் முக்கியத்துவம்

    ஓபிஎஸ் அணியுடன் எடப்பாடி அணி இணையும் முன்பாக, தம்பிதுரைதான் டெல்லிக்கான அதிமுக முகமாக இருந்து வந்தார். ஆனால், ஓபிஎஸ் அணி இணைந்த பிறகு டெல்லியில், தம்பிதுரைக்கான செல்வாக்கு குறைந்துள்ளது. அதிமுகவிற்குள்ளும் அவருக்கான செல்வாக்கு பழைய மாதிரி இல்லை என்கிறார்கள். எனவே எப்போதுமே, தனது தொகுதியான கரூரில்தான் தம்பிதுரையை அதிகம் பார்க்க முடிகிறது. இந்த நிலையில்தான், அதிமுக தலைமையின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாஜக மீது கடும் விமர்சனங்களை தம்பிதுரை முன்வைத்து வருகிறார் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

    அரசியல் விளையாட்டு

    அரசியல் விளையாட்டு

    மற்றொரு தரப்பினரோ, லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியை பாஜக விரும்புவதால், அதை தவிர்க்க, தம்பிதுரையை பயன்படுத்தி அக்கட்சி தலைமை விமர்சனம் செய்தபடி உள்ளது என்கிறார்கள். இதுதொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்டபோது, எந்த கட்சியையும், கூட்டணிக்காக கெஞ்சும் நிலையில் பாஜக இல்லை என்று காட்டமாக பதிலளித்தார்.

    English summary
    Why AIADMK's Thambidurai continuously criticize BJP and union government? here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X