ஏமாத்திட்டாங்க! ஓபிஎஸ்-சசிகலா-டிடிவிக்குத் தான் என்னோட ஆதரவு! கொங்கிலிருந்து வந்த தனியரசு சப்போர்ட்!
கரூர் : அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியால் ஓபிஎஸ்ஐ போலவே சசிகலாவும், டிடிவி தினகரனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களுக்கும் ஆதரவளிக்கிறேன் என கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் நிறுவனர் தலைவர் தனியரசு கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்ததில் இருந்தே ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தரும் முக்கிய கொங்கு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் நிறுவனரான தனியரசு முக்கியமானவராக இருக்கிறார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா இருந்தபோது இரட்டை இலையில் போட்டியிட்ட இவர் இவர் 2016 முதல் 2021வரை காங்கேயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே சசிகலா ஆதரவாளராகவும் தனியரசு இருந்து வந்திருக்கிறார்.

தனியரசு
இடையில் சில காலம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேசி வந்த இவர், 2021 சட்டமன்ற தேர்தலில் இருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசி வருகிறார். கொங்கு பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற அதிருப்தி காரணமாக ஓபிஎஸ் ஆதரவாளராக மாறியுள்ளார். அதே நேரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியால் ஓபிஎஸ்ஐ போலவே சசிகலாவும், தினகரனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களுக்கும் ஆதரவளிக்கிறேன் என கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் நிறுவனர் தலைவர் தனியரசு கூறியுள்ளார். கரூரில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

சசிகலா - டிடிவி தினகரன்
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு," அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்டுள்ளார். அதிமுக சட்ட விதிகளின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தான் அதிமுகவில் ஏற்கனவே அக்கட்சியின் தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட இரட்டை தலைமையை மறந்து பொதுக்குழுவை கூட்டி ஓ பன்னீர்செல்வத்தை வஞ்சித்து எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையை கொண்டு வந்திருக்கிறார்

ஏமாற்றிய எடப்பாடி
தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். இப்போது கூட தலைமை பதவிக்காக அதிமுக ஊசலாடி வருகிறது அதிமுகவில் எப்படி ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றப்பட்டாரோ அதேபோல சசிகலாவும், டிடிவி தினகரனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவே ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.

வலிமையான கட்சி
மீண்டும் நான்கு பேரும் இணைந்து செயல்பட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தது போல அதிமுக மிகவும் வலிமையான கட்சியாக இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயகம் மாண்புகளை மறந்து சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறார். அதிமுகவையும் அழிக்க நினைக்கிறார். இதன் காரணமாகவே நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
174 தொகுதிகளில் இரட்டை இலை.. அமித்ஷாவிடம் காய் நகர்த்திய எடப்பாடி.. 2029 கணக்கால் இறங்கி வந்த பாஜக! -
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
அதிமுக கதை குளோஸ்.. விஜய் வீட்டு கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி.. பங்கப்படுத்திய பன்னீர்செல்வம் -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications