குழந்தை பிறந்தும்.. குடித்தனம் நடத்த கூட்டி செல்லாத கணவர்.. குழந்தையை நீரில் மூழ்கடித்து தற்கொலை
கரூர்: குழந்தை பிறந்து, புருஷன் தன்னை மாமியார் வீட்டுக்கு கூட்டிகொண்டு போகலையாம்... அதுக்காக இப்படியா செய்யறது? பிறந்த குழந்தையை தண்ணி தொட்டிக்குள் அமுக்கி கொன்றே விட்டார் பெற்ற தாய்!
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செவந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ். பெங்களூரில் உள்ள ஹோண்டா கம்பெனியில் என்ஜினியராக உள்ளார்.

இவரது மனைவி மனோ பிரியா. 28 வயதாகிறது. பிரசவத்துக்காக பிரியா பெங்களூரிலிருந்து கரூர் மாவட்டம் சங்கரன் பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்திருக்கிறார். அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. மொகிதா என்று பெயர். இப்போது 11 மாதமாகிறது.
சில நாட்களாகவே தன்னை பெங்ளூருக்கு அழைத்து செல்லுமாறு பிரியா, மகேஷை தொந்தரவு செய்து கொண்டே வந்திருக்கிறார். ஆனால் மகேஷ் அழைத்து செல்லவே இல்லை. இதனால் சில தினங்களாகவே பிரியா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இன்று காலை வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்தபோது, மனோ பிரியா தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் குழந்தை எங்கே என்று தேடியபோது, தண்ணீர் தொட்டியில் குழந்தையை அமிழ்த்தி கொலை செய்யப்பட்டதையும் கண்டு மேலும் உறைந்தனர். உடனடியாக வாங்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் தாய்-குழந்தையின் உடல்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
பெற்ற தாயே குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications