கரூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி.. கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் கைது
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியை சேர்ந்த வினிதா என்பவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலிக்க மறுத்த காரணத்தால் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியை சேர்ந்தவர் வினிதா (21) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவாக வேலை செய்து வந்த ரஞ்சித் (25) என்பவருடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித்தின் நடவடிக்கைகள் சரி இல்லை என்று அறிந்த வினிதா காதலை முறித்துக் கொண்டதாகவும், இதனால் ரஞ்சித் கடும் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று வினிதாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்பதால் குளக்காரன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து உள்ளார்.
இதனை அறிந்த ரஞ்சித் வினிதாவை கொலை செய்ய முயற்சி எடுத்து நேற்று இரவு 11.30 மணி அளவில் கொதிக்க வைத்த எண்ணெய்யை எடுத்து வந்த ரஞ்சித், படுக்கை அறையின் உள்ளே தூங்கிக்கொண்டு இருந்த வினிதா மீது ஜன்னல் வழியாக ஊற்றி உள்ளார். இதில் வினிதாவின் உடலில் கொதிக்கும் எண்ணெய் பட்டதால் வலி தாங்கமுடியாமல் துடித்து கதறி உள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர்கள் வினிதாவை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். வினிதாவின் பெற்றோர்கள் பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் ரஞ்சித் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர். கடவூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications