கர்நாடகா: 2 ஆண்டு சிறை, எம்பி. பதவி பறிப்பு- அதே கோலாரில் இன்று ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் !
கோலார்: 2 ஆண்டு சிறை தண்டனை பெற்று எம்.பி. பதவியை ராகுல் காந்தி பறிகொடுக்க காரணமான கோலாரில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
2019-ம் ஆண்டு கோலாரில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடியை கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திடீரென விசாரிக்கப்பட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லோக்சபா எம்பியான ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி வெற்றி பெற்ற வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது ஏப்ரல் 20-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட இருக்கிறது.
ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்புக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடக்கப்பட்டன. ஒட்டுமொத்த எதிர்ககட்சிகளும் காங்கிரஸுக்கு ஆதரவாக ஒன்று திரண்டுள்ளன.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட காரணமாக இருந்த அதே கோலாரில் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது பொதுவான கருத்து கணிப்பு முடிவுகள். ஆளும் பாஜக மீதான ஊழல் புகார்கள், உட்கட்சி மோதல்கள், சீனியர் தலைவர்கள் ஓரம்கட்டப்படுதல் என பல காரணங்களால் பாஜக ஆட்சியை இழக்கும் எனவும் கூறப்படுகிறது.

இப்பின்னணியில் இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூர் வருகை தந்தார் ராகுல் காந்தி. அங்கிருந்து கோலார் தொகுதிக்கு சென்று ஜெய் பாரத் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இன்று மாலை பெங்களூர் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். ராகுலின் கர்நாடகா பயணம் மீண்டும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications