கர்நாடகா: கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவதாக அறிவிப்பு- வரிந்து கட்டும் ஜேடிஎஸ், பாஜக!
கோலார்: கோலார் சட்டசபை தொகுதியில் தாம் போட்டியிட இருப்பதாக கர்நாடகா முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார். கோலார் தொகுதியில் சித்தராமையாவை வீழ்த்துவதற்காக குமாரசாமியின் ஜேடிஎஸ் மற்றும் ஆளும் பாஜக கை கோர்க்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் கிங் மேக்கராவதில் முனைப்பாக இருக்கும் ஜேடிஎஸ் கட்சி பாதயாத்திரை நடத்தியது. அத்துடன் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கிறது.

ஆளும் பாஜகவில் பல்வேறு உட்கட்சி குழப்பங்கள் உச்சத்தில் இருக்கின்றன. அதிருப்தியாளர்களை சமாளிக்க கடைசி அமைச்சரவை மாற்றம் குறித்து பாஜக தலைவர்கள் விவாதித்து வருகின்றனர்.
இமாச்சல பிரதேச வெற்றியைத் தொடர்ந்து கர்நாடகா தேர்தலில் வென்றாக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது காங்கிரஸ். பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் தொங்கு சட்டசபைக்குதான் வாய்ப்பு என கூறப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெல்லும் எனவும் கூறுகின்றன. இதனால் காங்கிரஸில் சித்தராமையா உள்ளிட்ட சீனியர்கள் முதல்வர் கனவில் உள்ளனர்.
இதனாலேயே முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ள தலைவர்கள் பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட்டு எளிதாக வெல்ல வேண்டும் என படாதபாடுகின்றனர். சித்தராமையாவைப் பொறுத்தவரையில் வட கர்நாடகாவின் பாதாமி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அத்தொகுதியில் சித்தராமையாவுக்கு கடும் அதிருப்தி இருப்பதாகவே கூறப்படுகிறது. இம்முறை பாதாமியில் சித்தராமையா போட்டியிட்டால் தோல்வி உறுதி என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் திட்டவட்டமாக கூறி இருக்கின்றன. இதனாலேயே பாதாமி தொகுதியை விட்டு வேறு ஒரு தொகுதியில் போட்டிய்டுவது தொடர்பாக கடந்த சில மாதங்களாக சித்தராமையா பேசி வந்தார்.

மேலும் காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் தொகுதிகளை ஆய்வு செய்த சித்தராமையா, கோலார் தொகுதியை குறிவைத்தார். கோலார் சட்டசபை தொகுதியில் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் சித்தாராமையாவின் குருபா ஜாதியினர் கணிசமாக உள்ளனர். அதேநேரத்தில் ஒக்கலிகா கவுடா சமூகத்தினர் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்குகளில் பெரும்பகுதி ஜேடிஎஸ் வேட்பாளருக்கு செல்லக் கூடும். ஆகையால் ஒக்கலிகா கவுடா ஜாதியை தவிர்த்த இதர ஜாதிகளின் வாக்குகளை ஒருங்கிணைத்தால் வெற்றி எளிது என்பது சித்தராமையாவின் கணக்கு. கோலார் தொகுதி நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்த சித்தராமையாவுக்கான தேர்தல் கணிப்பு நிறுவனங்களும் வெற்றி நிச்சயம் என க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கின்றன. இன்னொரு பக்கம், கோலார் காங்கிரஸில் உட்கட்சி குழப்பம் நீடித்து வந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும் சில காய்நகர்த்தல்களை சித்தராமையா மேற்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கோலார் தொகுதியில் நேற்று சுற்று பயணம் செய்தார் சித்தராமையா. கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சித்தராமையா, தாம் கோலார் தொகுதியில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். கோலார் தொகுதியில் போட்டியிடுவது தமது விருப்பம் என்றும் கட்சி மேலிடம் இது குறித்து முடிவெடுக்கும் என்றும் கூறினார். அதேநேரத்தில் கோலார் தொகுதி எம்.எல்.ஏ.வாக என்னை தேர்ந்தெடுத்தால் வாரந்தோறும் இங்கு வந்து கோலார் மக்களை சந்திப்பேன் எனவும் வாக்குறுதி கொடுத்துள்ளார் சித்தராமையா.
சித்தராமையாவின் இந்த அறிவிப்பால் கோலார் தொகுதி ஸ்டார் தொகுதியாக உருவெடுத்திருக்கிறது. கோலார் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. சீனிவாச கவுடா, ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனால் ராஜ்யசபா தேர்தலில் மாற்றி வாக்களித்ததால் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜேடிஎஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒக்கலிகா ஜாதி வாக்குகளை மலைபோல நம்பி உள்ளது. ஜேடிஎஸ், காங்கிரஸ் இரு கட்சிகள்தான் கோலார் தொகுதியில் பலமாக உள்ளன. இதனால் சித்தராமையாவை வீழ்த்த பாஜக, ஜேடிஎஸ்-க்கு மறைமுகமாக உதவக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications