கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த இரட்டை 'அரிய' குழந்தைகள்
கிருஷ்ணகிரி: அரிதான வகையில் தலை ஒட்டியபடி ஆண் குழந்தைகள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளது அங்கு பரபரப்பாக பேசப்படுகிறதாம்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் என்பவரின் மனைவி, சுஷாந்தி பேறுகாலத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்குத்தான், அதிசய ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அறுவை சிகிச்சை
இந்த நிலையில் சுகப்பிரசவம் செய்ய முயற்சித்த நிலையில் வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். அப்போது, சுஷாந்திக்கு பிறந்தது 2 ஆண் குழந்தைகளாம்.

தலைகள்
இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வியந்து போனார்கள். பிறந்த குழந்தைக்கு நான்கு கால்கள் நான்கு கைகள் தனித்தனியே இரண்டு பிறப்புறுப்புகள் இருந்த நிலையில், தலை மட்டும் ஒன்றாக இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஆரோக்கியம்
பிறந்த குழந்தைகள் நன்றாக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், பிறந்த இரண்டு குழந்தைகளும் ஆண் குழந்தைகளாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த குழந்தைகளின் தலைகள் ஒன்றிணைந்து இருப்பதால் எப்படி இதை கையாள்வது என மருத்துவர்கள் திகைத்துப்போயுள்ளனர்.

வேறு மாநிலம்
குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருந்தாலும் தீவிர கண்காணிப்பில் பாதுகாத்து வருகின்றனர். குழந்தைகளைப் பெற்ற தாய் மற்றும் தந்தை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றுக் கூறப்படுகிறது. வேலைக்காக, தமிழகத்துக்கு வந்திருந்தனர். கொரோனா காலம் என்பதால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத காரணத்தினால் தமிழகத்திலேயே குழந்தையை பெற்றெடுத்ததாக குழந்தையின் தந்தை சுகுமாரன் கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications