மூன்றரை சவரன் தங்க நகையுடன் பணக்காரரை கடத்திய கிருஷ்ணகிரி பெண்.. ஓசூர் வீட்டுக்குள் நுழைந்தால்?
கிருஷ்ணகிரி: தொழில்நுட்பங்கள் வளர வளர, அது தொடர்பான ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து விட்டன.. அதேபோல திருமண மோசடிகளில் ஆண், பெண் என பாரபட்சமின்றி இரு பாலருமே சிக்கி வருகின்றனர்.. நகை மோசடி, திருமண மோசடி, நிலம் மோசடிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. அந்தவகையில் கிருஷ்ணகிரியில் நடந்த மோசடியில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பதுங்கியிருந்த குற்றவாளிகளில் 2 பேர் சிக்கிவிட்டார்கள்.. அதில் ஒருவர் பெண் ஆவார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் வசித்து வரும் சீதாராமன் என்பவருக்கு 34 வயதாகிறது.. இவர் திமுக உறுப்பினராக இருப்பதோடு, ரியல் எஸ்டேட் தொழிலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரிடம் பணம் அதிகமாக இருப்பது ஒரு மர்ம கும்பலுக்கு தெரிந்துள்ளது.. உடனே தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முடிவு செய்தது.

மூன்றரை சவரன் நகை
கடந்த வெள்ளிக்கிழமை ஸ்வேதா என்ற பெண், சீதாராமனை தொடர்பு கொண்டு நிலம், வீட்டு மனை வாங்குவது குறித்து நேரில் பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார். உடனே சீதாராமனும் சூளகிரியிலிருந்து ஓசூர் அருகே உள்ள பத்தளப்பள்ளிக்கு சென்றுள்ளார்.. உடனே ஸ்வேதா, தன் வீடு அருகில் உள்ளதால், அங்கே சென்று நிலம் குறித்து விரிவாக பேசலாம் என்று சொல்லி சீதாராமனை அழைத்து சென்றுள்ளார்.
சீதாராமனும் ஸ்வேதா வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. அப்போது அங்கே மறைந்திருந்த ஏழு பேர் கும்பல், சீதாராமனை அவர் வந்த காரிலேயே கடத்தி சென்றது.. அறையில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி, ரூ.5 கோடி பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளது. மேலும் சீதாராமனிடமிருந்த இரண்டரை தங்க சங்கிலி, 1 சவரன் தங்க மோதிரத்தை பறித்துக் கொண்டது அந்த கும்பல்.
பணத்தை குறைத்த கும்பல்
விடிகாலை வரை சீதாராமனை டார்ச்சர் செய்த அந்த கும்பல், 5 கோடியிலிருந்து பணத்தை குறைத்து கேட்டது.. ஏற்கனவே பிடுங்கி வைத்திருந்த செல்போனை சீதாராமனிடம் தந்து, "25 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு, உன் நெருங்கிய நண்பனை வரச்சொல்" என்று பேச சொன்னார்கள்.
உடனே சீதாராமன் நெருங்கிய நண்பர் லட்சுமிபதி என்பவருக்கு போனை போட்டு பேசினார்.. அவரிடம் போனில் பேசிக்கொண்டே, தான் கடத்தி வைக்கப்பட்டிருந்த லொகேஷனையும் லட்சுமிபதிக்கு அனுப்பிவிட்டார். லொகேஷனை பார்த்து அதிர்ச்சியடைநத் லட்சுமிபதி, உடனடியாக சீதாராமன் குடும்பத்தினருக்கு நிலைமையை சொல்லவும், குடும்பத்தினர் எஸ்பியை சந்தித்து புகார் தந்தனர்.
இதையடுத்து, எஸ்பி உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.. காவல்துறை தங்களை தேடுவதையறிந்த கும்பல், உடனே சீதாராமனை அவரது காரில் வைத்து கொண்டு, வேறு இடம் நகர்ந்து செல்ல முயன்றது. ஆனால் அதற்குள் நாலாபக்கமும் தேடி கொண்டிருந்த போலீசார், சீதாராமனின் காரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
மூளையாக செயல்பட்ட பெண்
சங்கர் (38), சுரேஷ் (40), அஜய் (19), கோகுலகண்ணன் (23) ஆகிய 4 பேரையும் காருக்குள்ளேயே வைத்து கைது செய்தது.. ஆனால், ஸ்வேதா, ஓசூர் மோகன், நாகராஜ் ஆகிய 3 பேரும் தப்பிவிட்டனர்.. இதனால் அவர்களை பிடிக்க மீண்டும் தனிப்படை போலீசார் மும்முரமாகினர்..
நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட 3 பேரையுமே போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். வெளி மாநிலத்திற்குத் தப்ப முயலுவதற்காக ஸ்வேதா முயற்சி செய்து கொண்டிருந்தாராம், அப்போதுதான் நேற்று அதிகாலை நேரத்தில் அலச நத்தம் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.. ஸ்வேதாவுக்கு 35 வயதாகிறது..
தொழிலதிபரை கடத்தி பணம் மிரட்டிய சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதே ஸ்வேதா தான் என்பதும் தெரியவந்துள்ளது.. கைதானவர்களிடம் விசாரணை நடத்தியபோது, தொழிலதிபரிடம் பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்று ஆசைகாட்டினாராம். இப்போது இந்த கடத்தல் சம்பவத்தில் 6 பேர் கைதாகி உள்ள நிலையில், மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications