கிருஷ்ணகிரி அருகே சர்ரென வந்த கார்.. போலீஸ் வாகனம் மீது டமால் என மோதல்.. எஸ்எஸ்ஐ காயம்- வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வேகமாக வந்த கார் போலீஸ் வாகனத்தின் மீது மோதியதில் மாரண்டஹள்ளி சிறப்பு காவல் ஆய்வாளர் காயமடைந்துள்ளார்.
கொரோனா பாதிப்பை அடுத்து அதன் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து 21 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியா முழுவதுமுள்ள மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்திப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் போலீஸாரும் இந்தியா முழுவதும் முக்கிய சாலைகளில் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தேவையின்றி வெளியே வந்தால் அவர்களை எச்சரித்தும் தண்டனை கொடுத்தும் போலீஸார் அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நிலையில் தருமபுரி மாவட்ட பாலக்கோடு வட்டம், வெள்ளிச்சந்தை அருகே ஒரு சந்திப்பு பகுதியில் போலீஸார் வாகனம் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் போலீஸார் வாகனம் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தில் இருந்த மாரண்டஹள்ளி காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த காரில் இருந்தவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications