கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு! உறவினர்கள் போராட்டம்
கிருஷ்ணகிரி: ஒசூர் அஞ்செட்டி பகுதியில் 8ம் வகுப்பு சிறுவன் நேற்று கடத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுவன் சடலமாக காட்டு பகுதியில் மீட்கப்பட்ட இருக்கிறார். கடத்தல் குறித்து புகார் அளித்தும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஞ்செட்டியை அடுத்த மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ்-மஞ்சு தம்பதியின் 13 வயது மகன் ரோகித் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை முதல் காணவில்லை. எங்கு தேடியும் மகன் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் சிறுவனை சிலர் காரில் ஏற்றிச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காலை வரை சிறுவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அஞ்செட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் ரோகித் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
இங்குள்ள வனப்பகுதியில் கொண்டை ஊசி வளைவில் சாலை ஓரத்தில் சிறுவனின் சடலம் கிடைத்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அஞ்செட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். கடந்த 3 மணி நேரமாக பெற்றொர், உறவினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுவனின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். விரைவில் கைது நடவடிக்கை தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இளம்பெண் ஒருவர் காதலருடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்ததாகவும், இதை வெளியில் சொல்லக்கூடாது என்று சிறுவனை சமாதானம் படுத்த முயன்றதாகவும், இதில் சிறுவன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஊர் மக்கள் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் காவல்துறையின் முழுமையான விசாரணைக்கு பின்னரே இந்த சம்பவத்திற்கான காரணம் தெரிய வரும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications