முனுசாமி விட்ட சாபம்.. "அவர்" வேற வாயை திறந்துட்டாரே.."இந்தியா" கூட்டணி டமார்தான்.. எரிச்சலில் திமுக
கிருஷ்ணகிரி: திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சுக்கள் விஸ்வரூபமெடுத்து வரும்நிலையில், உதயநிதி மீதான விமர்சனங்களும் தொடர்ந்து குவிந்து வருகிறது.
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கொந்தளித்து வருகிறது.. அமித்ஷா முதல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரை கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"சனாதனம் குறித்து பேசி திமுக மீதுள்ள அதிருப்தியை திசைத்திருப்ப முயலும் உதயநிதி ஸ்டாலின், திமுகவில் சமதர்மம் இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்" என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
உதயநிதி பேச்சு: இதனிடையே, உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் என்ற உத்தரபிரதேச சாமியார் விவகாரமும் வெடித்து கிளம்பி உள்ளது. மற்றொருபக்கம், உதயநிதி ஸ்டாலின் மீது சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர் டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இன்னொருபக்கம் டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் மூத்த தலைவர்கள் குழு எதிர்ப்பு கடிதத்தையும் அனுப்பியிருக்கிறார்கள்.
புகார்கள்: இதனிடையே, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாங்களாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் தூதர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கடிதம் எழுதியுள்ளனர்.
இப்படி நாலாபக்கமும் எதிர்ப்புகள் பதிவாகி வரும்சூழலில், உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.. தன்மீது போடப்பட்டுள்ள, அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் உறுதி தெரிவித்திருக்கிறார்.. அதேபோல, கொலை மிரட்டல் விடுத்த சாமியார் மீது வழக்குப்போடுவது, உருவ பொம்மை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முனுசாமி: ஆனால், பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் உதயநிதி மீதான விமர்சனத்தையும், கண்டனத்தையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.. அந்தவகையில், அதிமுகவின் மூத்த தலைவர் முனுசாமியும், உதயநிதியை விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த புளியஞ்சேரி கிராமத்தில், அதிமுக துணை பொதுச்செயலாளர் முனுசாமி சொன்னதாவது: சனாதன தர்மம் என்பது இந்து சமயத்தில், பல ஆயிரம் ஆண்டுகளாக கடைப்பிடிக்கும், இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறை, ஒழுக்கம் உள்ளிட்டவற்றை கூறும் கோட்பாடாகும்..
ஜெயலலிதா: சுயநலம் கருதி அதை மாற்ற சிலர் முயற்சித்தபோது, அண்ணாதுரை திமுகவை தொடங்கி, ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கடவுள் நம்பிக்கையாய் இருந்தும், பிற மதங்களை மதித்தனர்.. மெக்கா, ஜெருசலேம் செல்ல நிதி வழங்கினார்கள்.. ஆனால், உதயநிதியோ, இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் டெங்கு, கொரோனா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
இதை அவர்கள் கூட்டணியில் உள்ளவர்களாலேயே ஏற்க முடியாது. "இந்தியா" கூட்டணி பல்வேறு எதிர்மறை சித்தாந்தங்களை கொண்டு இப்போது இணைந்துள்ளது... இதுபோன்ற கருத்துகளால், அது விரைவில் பிரியத்தான் போகிறது..
மீண்டும் மோடி: அந்த கூட்டணி சார்பில், மூன்று கட்டங்களாக நடந்த கூட்டத்தில், வெவ்வேறு கருத்துக்களை பரிமாறி இருக்கிறார்கள்.. அப்படியிருக்கும்போது, அமைச்சர் உதயநிதி பேச்சால், தேர்தல் நெருங்கும் நேரத்தில், அந்த கூட்டணியில், இறுதியாக எத்தனை கட்சிகள் இருக்கும் என்றே தெரியாது.. அதனால், பிரதமராக மறுபடியும் மோடியே வருவார் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்" என்றார்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications