அண்ணியுடன் உறவு.. சொல்ல சொல்ல அடங்கவே இல்லையாமே.. அதுக்காக இப்படியா.. அதுவும் புதருக்குள்ளே..!!
அண்ணியுடன் உறவு கொண்ட நண்பரை அடித்து கொன்றுள்ளார் இளைஞர் ஒருவர்
கிருஷ்ணகிரி: புதர் பகுதியில் விழுந்து கிடந்த சடலத்தை கண்டு, கிருஷ்ணகிரி மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர்.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
பீகார் மாநிலம் மொஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவிஜிகுமார்.. 22 வயதாகிறது.. இவரது நண்பர் பங்காஜூ பசுவான், 25 வயதாகிறது.. இருவரும் கட்டிட வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் தங்கி, ஒரு தனியார் அப்பார்ட்மென்ட்டில் கட்டிட வேலை செய்து வந்தனர்... இதற்காக இருவரும், அதேபகுதியில் ஒரே ரூம் எடுத்து தங்கி, வேலை பார்த்து வந்திருக்கிறார்.

கான்ட்ராக்ட்
இந்நிலையில், அந்த பில்டிங் கான்ட்ராக்ட்டரான ஜெயக்குமார் என்பவருக்கு சிவிஜிகுமார் திடீரென போன் செய்தார்.. தன்னுடன் தங்கியிருக்கும் பங்காஜூ பசுவானை திடீரென காணவில்லை என்று பதறிபோய் சொன்னார்.. இதைக்கேட்டு அதிர்ந்து போன ஜெயக்குமாரும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.. பிறகு, சிவிஜிகுமாருடன் சேர்ந்து ஜெயக்குமாரும், காணாமல் போன பங்காஜுவை தேடும் பணியில் ஈடுபட்டார்.

புதர் புதர்கள்
இவர்கள் அப்பார்ட்மென்ட் கட்டி வரும் பகுதியை சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டுள்ளது.. எனினும் அங்கே சென்று தேடலாம் என்று முயன்றபோதுதான், அந்த பகுதியிலேயே முட்புதரில் பங்காஜூ பசுவான் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டனர்.. உடனடியாக போலீசாருக்கும் இதை பற்றி தகவல் தெரிவித்தனர்.. போலீசாரும் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றினர்.. பங்காஜூ பசுவான் கழுத்தை இறுக்கி யாரோ கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது... பிறகு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்... விசாரணையையும் துவங்கினர்..

விசாரணை
முதல் விசாரணையே அவருடன் தங்கியிருந்த சிவிஜிகுமார்தான்.. போலீசார் கேள்விகளை கேட்க ஆரம்பிக்கும்போதே, உளற ஆரம்பித்தார் சிவிஜிகுமார்.. இதனால் சந்தேகமடைந்த போலீசார், கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியபோது, மொத்த விஷயத்தையும் சொல்லிவிட்டார்.. அத்துடன் பங்காஜூ பசுவானை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். ஒரே ரூமில் தங்கியுள்ள இவர்கள் இருவருமே பீகாரை சேர்ந்தவர்கள் என்பதால், இரு குடும்பத்திலுமே போனில் பேசி வந்துள்ளனர்..

அண்ணி
அந்தவகையில், சிவிஜிகுமாரின் அண்ணியுடன் பங்காஜூ பசுவான் கொஞ்சம் ஓவராகவே பேசியுள்ளார்.. இது கள்ளக்காதலாகவும் வளர்ந்து வந்துள்ளது.. ஆனால், இந்த விஷயம் சிவிஜிகுமாருக்கு தெரியவந்துள்ளது.. அதனால், தன் அண்ணியிடம் இதுபோல தகாத உறவு வைத்திருக்ககூடாது என்று கண்டித்துள்ளார்... ஆனால், பங்காஜூ அந்த பேச்சை காதிலேயே வாங்கவில்லை.. ஒரே ரூமில் இவர்கள் தங்கியிருந்தாலும், அண்ணி விஷயத்தில், இவர்கள் இருவருக்குமே முன்விரோதம் இருந்து வந்துள்ளது..

முட்புதர்
எனினும், அண்ணியுடனான கள்ளக்காதலை கைவிடாததால், சம்பவத்தன்று, சிவிஜிகுமார், பங்காஜூ பசுவானை, வேலை விஷயமாக பேச வேண்டும் என்று காட்டுப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.. அங்கே ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் கழுத்தை நெரித்து கொன்று, புதருக்கு அடியில் சடலத்தை போட்டுவிட்டு வந்ததும் தெரியவந்தது.. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவிஜ்குமாரை கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.

நயவஞ்சகம்
ஒரே ரூமில் தங்கி இருந்தாலும், அண்ணியுடன் கள்ள உறவு இருந்ததை, சிவிஜிகுமாருக்கு தெரியாமலேயே இருந்துள்ளது.. ஆனால் ஒருமுறை சொந்த ஊரான முஜாக்பூருக்கு சென்றபோதுதான், அண்ணியுடன் கள்ளக்காதல் இருப்பதை நேரடியாகவே பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.. ஆனால், அதற்கு பிறகு கிருஷ்ணகிரிக்கு போக வேண்டாம், முஜாக்பூரிலேயே இருந்துவிடலாம் என்றுதான் பங்காஜூ நினைத்தாராம்.. இதை புரிந்துகொண்ட சிவிஜி, ஒரு புது காண்ட்ராக்ட் கிடைத்துள்ளது, வேலைக்கு போவோம் வா" என்று சாதுர்யமாக பேசி ஒசூருக்கு அழைத்து வந்துள்ளார்.

அண்ணி அண்ணி
அப்போதும்கூட, பங்காஜூ, அந்த அண்ணியுடன் போனில் பேசி வந்ததாகவே தெரிகிறது. இதெல்லாம் சேர்ந்துதான், கொலை செய்யும்வரை சிவிஜ்குமாருக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது.. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பங்காஜூவை பாஸ்வானை, வேலை விஷயமாக பேச வேண்டும் என்று வெளியில் அழைத்துள்ளார்.. தூக்க கலக்கத்தில் வந்த பங்காஜுவையும் சரமாரியாக அடித்து, கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார்.. இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications