"லீலை".. ஸ்கூல்லயிருந்தே நீடித்த உறவு.. யாரந்த டிரைவர்? சிதைக்கு தீ மூட்டிய மனைவி.. பெயர் "லட்சுமி"
கிருஷ்ணகிரி: கரிக்கட்டை போல இறந்துகிடந்த சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டதில், உண்மை குற்றவாளி சிக்கி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே சானமாவு வனப்பகுதியில், கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி ஒரு ஆண் சடலம் கிடந்தது.. அந்த சடலம் தீயில் எரிக்கப்பட்டு கிடந்தது.. அந்தவழியாக இதை பார்த்து கதறிய பொதுமக்கள், அலறியடித்து கொண்டு, உத்தனப்பள்ளி போலீசாருக்கு இதை பற்றி தெரிவித்தனர்.. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இறந்த நபர் யார் என்ற அடையாளமும் தெரிந்தது. அவர் பெயர் பிரகாஷ்.. 43 வயதாகிறது.. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவராம்.. மனைவி பெயர் லட்சுமி 36 வயதாகிறது என்பது தெரியவந்தது..
சந்தேகம்: இதையடுத்து, போலீசார் லட்சுமியிடம் விசாரணையை நடத்தினார்கள்... விசாரணையின் ஆரம்பத்தில் இருந்தே போலீசாருக்கு லட்சுமி மீது சந்தேகம் கிளம்பியது.. பிறகுதான் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.. ஆரம்பத்தில் மழுப்பலான பதிலை சொன்னவர், பிறகு, உண்மையை ஒப்புக் கொண்டார்.. இது ஒரு கள்ளக்காதல் கொலை என்பது அம்பலமானது.
லட்சுமியின் கள்ளக்காதலன் பெயர் சின்னராஜ்.. இவருடைய உதவியுடன்தான் கணவனை லட்சுமி கொன்றுள்ளார். இதுகுறித்து போலீசில் அவர் தந்த வாக்குமூலம் இதுதான்:
மதுபானம்: "என்னுடைய கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது... தினமும் குடித்துவிட்டு என்னிடம் தகராறு செய்வார்.. தினமும் பாலியல் தொல்லையும் தந்து வந்தார்.. அப்படித்தான், கடந்த மார்ச் மாதம் 18ம் தேதியும் குடித்து விட்டு என்னிடம் வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். அப்போது நான் வீட்டில் இருந்த கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன்... அதில் அவர் இறந்துவிட்டார்.. இதையடுத்து சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தேன்.
கள்ளக்காதல்: அதனால், என்னுடைய கள்ளக்காதலன் சின்ன ராஜுக்கு போன் செய்தேன். சின்ன ராஜ் சரக்கு வேன் டிரைவர். அவருடன் எனக்கு ஸ்கூல் படிக்கும்போதிருந்தே காதல் இருந்தது... கல்யாணம் ஆனபிறகும்கூட, கள்ளக்காதல் தொடர்ந்தது.. நான் போன் செய்து அழைத்ததுமே, சின்னராஜ் வீட்டிற்கு வந்தார். பிறகு, என்னுடைய கணவரின் உடலை அங்கிருந்து எடுத்து சரக்கு வாகனத்தில் போட்டு சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு சென்றோம்.
ஆள் நட மாட்டம் இல்லை என்பதை தெரிந்துகொண்டு, அங்கு உடலுக்கு தீ வைத்து எரித்து விட்டு வந்து விட்டோம். உடலை எரித்ததால் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தோம். ஆனாலும் விசாரணை நடத்தி எங்களை கைது செய்தார்கள்" என்றார் வாக்கு மூலத்தில்..!!

கைது: காட்டுக்குள் கணவனை எரித்துவிட்டு, கணவனை காணோம் என்று பெயரளவுக்கு ஒரு புகாரையும் போலீசில் லட்சுமி தந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.. கணவன் வீட்டில் இல்லாத சமயங்களில் எல்லாம் சின்னராஜ் வந்துபோயுள்ளார்.. கணவன் வீட்டில் இருந்த சமயங்களில் எல்லாம், போனில் பேசிக் கொண்டே இருப்பார்களாம்.. கள்ளக்காதல் விவகாரம் கணவனுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துள்ளது.. அதேசமயம், பாலியல் டார்ச்சர் தந்ததால்தான், கொலையை செய்ததாக, லட்சுமி பலமுறை தெரிவித்துள்ளார்.. இப்போது கள்ளக்காதலர்கள் இருவருமே ஜெயிலில் உள்ளனர்..!!
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications