ஓசூரில் பயங்கரம்.. மனைவியை சந்திக்க வந்த கணவன்.. அடித்துக் கொலை.. நடந்தது என்ன ?

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே பிரிந்து சென்ற மனைவியை சந்திக்கச் சென்ற பெங்களூரைச் சோ்ந்த கணவனை, மனைவியின் உறவினா்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    ஓசூரில் பயங்கரம்.. மனைவியை சந்திக்க வந்த கணவன்.. அடித்துக் கொலை

    கா்நாடக மாநிலம், பெங்களூரு, மங்கம்மா பாளையத்தைச் சோ்ந்தவா் முகமது இம்ரான் (32). இவருக்கும் கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூரைச் சோ்ந்த ருக்கு என்கிற காணும்பி என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன், மனைவி இருவரும் ஆறு மாதங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும், பிரிந்துபோன மனைவி தொட்டபேளூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தாா்.

    சந்திக்க முடியவில்லை

    சந்திக்க முடியவில்லை

    இந்நிலையில் தனது மனைவியை சந்திப்பதற்காக அவ்வப்போது கணவா் முகமது இம்ரான் தொட்ட பேளூா் பகுதிக்கு வந்துச் சென்றதாகவும். ஆனாலும் தனது மனைவியை சந்திக்க முடியாமல், முகமது இம்ரான் திரும்பிச் சென்று விடுவாராம்.

    இம்ரான் மீது தாக்குதல்

    இம்ரான் மீது தாக்குதல்

    இந்த நிலையில் நேற்று மனைவி ருக்குவை சந்திப்பதற்காக முகமதுஇம்ரான், தொட்டபேளூா் பகுதிக்கு வந்ததாகவும், இதனை அறிந்த மனைவியின் உறவினா்கள் அவரை அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    உயிரிழப்பு

    உயிரிழப்பு

    இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

    சிறையில் அடைப்பு

    சிறையில் அடைப்பு

    இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கணேச காலனியைச் சோ்ந்த சித்திக், மாலிக், ரகுமான், தொட்டபேளூரைச் சோ்ந்த சாதிக், ஜமீா் ஆகிய 5 பேர் தலைமறைவான நிலையில், அவர்களை பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சாய் சரண் உத்தரவிட்டார். இதன்பேரில் தேன்கனிகோட்டை DSP. கிருத்திகா மேற் பார்வையில், இராயகோட்டை ஆய்வாளர் சுப்பிரமணி துரித நடவடிகையால் கெலமங்கலம் உதவி ஆய்வாளர் பார்த்திபன் காந்திக் மற்றும் சிவராஜ் ஆகிய குழுவுடன் மிக சாதுர்யமாகவும், விரைவாக செயல்பட்டு தப்பி சென்ற 5 கொலை குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த கெலமங்கலம் காவல் நிலைய போலீஸாா் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறைக்கு கொண்டு சென்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+