15 வயசு புள்ளிங்கோ.. மண்டை மேல "கோழிக்கொண்டை.." பார்த்த இன்ஸ்பெக்டர்.. கையோடு கூட்டிப் போய் "நறுக்"
கிருஷ்ணகிரி: கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் சுற்றியுள்ளான் ஒரு சிறுவன்.. பார்த்ததும் கையோடு சலூன் கடைக்கு அழைத்துச் சென்று, முடியை ஒட்ட நறுக்கி விட்டுள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை மஹராஜா கடை காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கே வித்தியாசமான 'உருவத்தில்' 'புள்ளிங்கோ' பாணியில் ஒரு சிறுவன் சுற்றிக் கொண்டிருந்தார்.

கோழிக்கொண்டை ஹேர் ஸ்டைல்
அந்த சிறுவன் காதில் கடுக்கன் அணிந்துகொண்டு, வித்தியாசமான கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைல் வைத்திருந்தான். அதாவது தலையின் பின் பக்கத்தில் ஒரு இடத்தில் மட்டும், பனங்காயை அரிவாளால் கொத்தி விடுவார்களே, அதுபோல அந்த சிறுவன் தலை இருந்தது.

15 வயசுதான் இருக்கும்
அவன், 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் போல இருந்தது. அதைப்பார்த்த காவல் ஆய்வாளர் அச்சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் கத்தாழை மேடு பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது.

சலூன் கடை
இந்த சிறு வயதில் இப்படியொரு அலங்கோலமான ஹேர்ஸ்டைல் தேவையா என்று நொந்துபோன காவல் ஆய்வாளர் கணேஷ்குமார், சிறுவனை அருகில் இருந்த சலூன் கடைக்கு அழைத்துச் சென்று, சீராக முடிதிருத்தம் செய்து அனுப்பி வைத்தார்.

படிக்குற வயசில்
மேலும் படிக்கிற வயதில் இதுபோன்று ஹேர்ஸ்டைல் வைத்திருக்கக்கூடாது எனவும், உங்கள் கவனம் படிப்பில் மட்டும் இருக்க வேண்டும் எனவும் அச்சிறுவனுக்கு அறிவுரை கூறினார். அரிவாளால் கேக் வெட்டும் ரவுடிகளை கைது செய்வதைப் போலத்தான், இதுவும். பிறரை அச்சுறுத்துவது போன்ற எந்த செயலும் தப்புதான் என்கின்றனர் காவல்துறையினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications