கிருஷ்ணகிரியில் "வட்டமாக" சுற்றிய தெருநாய்கள்.. ஓசூர் சிறுமியை கடித்து குதறி.. நெஞ்சை பதற செய்யுதே
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த சம்பவமானது, ஒட்டுமொத்த மக்களின் இதயத்தை நடுநடுங்க செய்து வருகிறது.. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பதற வைத்து வருகிறது.
ஓசூரில் சமீபகாலமாகவே, தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.. அங்குள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகளில், இந்த தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன..

மேலும், சாலைகளில், தெருக்களிலும், நடந்து செல்வோரையும், வாகன ஓட்டிகளையும் விரட்டி விரட்டி சென்று தொந்தரவு கொடுப்பதும் அதிகரித்து வருகிறது. இப்படித்தான், கடந்த ஜூன் மாதம், ஓசூர் பாலாஜி நகரில் 7 பேரை தெருநாய்கள் கடித்து குதறின.. அந்த 7 பேருமே சிறுவர், சிறுமிகள் ஆவார்கள்..
தாத்தா கதறல்: நாய் கடித்து குதறியதில் அந்த குழந்தைகள் அலறி துடித்தனர்.. பிறகு, அவர்களை மீட்டட பொதுமக்கள், ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, உடனடி சிசிச்சைகளை தரச்செய்தனர்.
இதற்கு பிறகு, கடந்த மாதமும் இதே போல ஒரு சம்பவம் நடந்தது. ஓசூர் முனீஸ்வர் நகரில், ஒரு தாத்தாவை தெருநாய்கள் கடித்து குதறி எடுத்துவிட்டன. நாய்கள் ஒன்றுதிரண்டுவிட்டதால், தாத்தாவால் ஓடக்கூட முடியவில்லை. இதையடுத்து, ரத்த காயங்களுடன் அவரை ஓசூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக பொதுமக்கள் சேர்த்தனர்.
இப்படி ஓசூர் நகரில், தெருநாய்கள் கடித்ததால் மட்டுமே, அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இதே ஓசூரில், தெருநாய்களிடம் ஒரு சிறுமி சிக்கியிருக்கிறாள். ஓசூர் வாசவி நகரை சேர்ந்த கார்த்திக், சுசீலா தம்பதியரின் 6 வயது இந்த சிறுமி.. சாலையில் நடந்து செல்லும்போது, அந்த பகுதியிலுள்ள தெருநாய்கள் ஒன்றுகூடிவிட்டன..
அலறிய சிறுமி: சிறுமியை சுற்றி வட்டமடித்தன.. பிறகு, வளைத்து வளைத்து கடித்து குதறி எடுத்தன.. வலி தாங்க முடியாமல் சிறுமி கதறி அலறினாள்.. அந்த சத்தம் கேட்டு, குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து சிறுமியை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இப்போது சிறுமிக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

தெருநாய்களின் அட்டகாசத்தை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தவாறே உள்ளனர்..
சிறுமியை நாய்கள் சுற்றி வளைத்து கடிக்கும் வீடியோ, இணையத்தில் வெளியாகி பதற செய்துள்ளது.. அந்த வீடியோவில், குழந்தை தனியாக தெருவில் நடந்து வருகிறாள்.. அப்போது ஒரு நாய் மட்டும் முதலில் ஓடிவந்து குதறுகிறது. இதிலேயே அந்த சிறுமி, அலறி கத்தி, நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டாள்..
தெருநாய்கள்: அதற்கு பிறகு, அடுத்தடுத்த தெருநாய்கள் ஓடிவந்து அந்த குழந்தையை கடித்து குதறுகின்றன.. நாய்கள் கடித்து தொடர்ந்து பலபேர் மருத்துவமனையில் உள்ளபோது, இத்தனை நாட்களும் ஏன் நிர்வாகம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்ற கேள்விகளை இணையவாசிகள் எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications