கழுத்தில் மஞ்சள் தாலியுடன் வந்த 8ம் வகுப்பு மாணவி.. ஆடிப்போன கிருஷ்ணகிரி அரசு பள்ளி.. இதுதான் விஷயம்
கிருஷ்ணகிரி: அரசு பள்ளியிலேயே மாணவர்கள் விளையாட்டாக தாலி கட்டி கொள்வார்கள்.. அல்லது மாலை மாற்றிக்கொண்டு, அதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிடுவார்கள். ஆனால், 14 வயதுடைய கிருஷ்ணகிரி சிறுமி, தாலியுடன் அரசு பள்ளிக்கு வந்துள்ளார்.
குழந்தை பருவத்திலேயே, பெண்களுக்கு கல்யாணம் செய்து வைக்கும் போக்கு, இன்னமும் நம்முடைய தமிழகத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதன்காரணமாக, அந்த பிஞ்சு குழந்தைகளின் சமூக வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களது அடிப்படை உடலியல் ஆரோக்கியமும் சேர்ந்து கெட்டுப்போகின்றன.

அதுமட்டுமல்ல, ஒரு குழந்தையே, இன்னொரு குழந்தையை பெற்றெடுப்பதால், பிறக்கும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகளாக பிறந்துவிடுகின்றன.. இதனால், கருவுற்ற குழந்தையும் பாதிப்புகளுக்கு உண்டாகும் நிலைமையும் ஏற்படுகின்றன.
குழந்தை திருமணம்
இதுபோன்ற குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் நம்முடைய நாட்டில் வலுவாக இருந்தும்கூட, குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. முழுமையாக குழந்தை திருமணங்களை தடுக்க முடியாததால், 18 வயதுக்கு முன்பேயே பெண் குழந்தைகள் தாயாவதையும் தடுக்க முடியவில்லை.
இதனால் பெண் சிசு கொலைகளும் அதிகரித்து வருகின்றன.. பெண்சிசு கொலை அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில், விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி போன்றவை முன்னணியில் உள்ளன.. எனவே, இந்த மாவட்டங்களில் எல்லாம், தமிழக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது.. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் ஒரு கொடுமை நடந்துள்ளது.
பெற்றோரே காரணம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அந்த மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.. இந்த மாணவிக்கு அவரது பெற்றோரே முன்னின்று திருமணம் செய்து வைத்துள்ளார்கள்,
காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், இந்த மாணவிக்கும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோயிலில் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள்.. இந்நிலையில், நேற்று பள்ளிக்கு, கழுத்தில் தாலிக்கயிறுடன் வந்தார் மாணவி.. இதைப்பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்... மாணவியை அழைத்து அதுகுறித்தும் விசாரித்தனர். அப்போதுதான், நேற்றுதான் தனக்கு திருமணம் ஆனதாக மாணவி கூறினார்.
5 பேர் மீது வழக்கு
இதையடுத்து, ஆசிரியர்களே சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.. பிறகு, பள்ளிக்கு வந்த குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் சமூக நலத் துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸார், மாணவி மற்றும் மணமகனின் பெற்றோர், மணமகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications