"முதல் கோணல் முற்றும் கோணல்!" கிருஷ்ணகிரியில் காலை உணவு காலி! பக்கத்து கடையில் இட்லி வாங்கிய அவலம்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் அரசு பள்ளிகளில் காலை உணவு தீர்ந்து போனதால் மாணவிகளுக்கு பக்கத்து கடையில் இருந்து இட்லி வாங்கி வந்து பரிமாறப்பட்டது. இதனால் மாணவிகள் வெறும் தட்டுடன் அரை மணி நேரம் காத்திருந்த அவலம் நடந்தது. அதுவும் முதல் நாளிலேயே இப்படியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள். இங்கு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது.

Krishnagiri government school

நடுநிலை பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து இன்று முதல்வர் தொடங்கி வைத்தார். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அப்போது திடீரென உணவு தீர்ந்து போனதால் மாணவிகள் தட்டை கையில் ஏந்தி காத்திருந்தனர். இதையடுத்து பக்கத்து கடையில் இருந்து இட்லி வாங்கி வந்து மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. இதையடுத்து அவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

ஒரு பள்ளியில் நடுநிலை வகுப்பை சேர்ந்த எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து கணக்கெடுக்காமல் எப்படி இப்படி எட்டும் எட்டாமல் உணவை தயாரித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மற்றொரு சம்பவம்

இதே போல் திருமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியிலும் காலை உணவு தீர்ந்து விட்டதால் அங்கும் பக்கத்து கடையில் இருந்து இட்லி வாங்கி வந்து மாணவிகளுக்கு கொடுத்தனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், "இதை சாப்பிட்டுக் கொண்டே இருங்கள், வேறு உணவு வந்துவிடும்" என கூறியபடியே பரிமாறினர்.

இடைநிற்றல் இல்லாத தொடர்ச்சியான கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஸ்டாலின் முதல்வரின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தவெக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை நடுநிலை பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய முதல்வர் விஜய் விரும்பினார்.

அந்த வகையில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்தால் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இந்த திட்டம் திருவான்மியூர் அரசு பள்ளியில் முதல்வர் விஜய்யால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது முதல்வர் வருகை தருவதற்கு முன்னர் அந்த பள்ளிக்கு ஒரு வாகனத்தில் பையில் இருப்பது என்னென்ன என்பதை ஸ்கேன் சோதனை செய்யும் இயந்திரம் காரில் வைத்து கொண்டு வரப்பட்டது.

அதில் குழந்தைகளின் புத்தகப் பைகளை வைத்து சோதனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஞ்சு குழந்தைகள் தங்கள் பைகளில் அப்படி என்ன கொண்டு வந்துவிட போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய்க்கு ஏன் பொது இடங்களுக்கு செல்வதென்றாலே இல்லாத வேலைகளை எல்லாம் செய்கிறார் என கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+