Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசூர் மாநகராட்சி பில் கலெக்டருக்கு ஒரே நாளில் 75000 சம்பாதிக்க ஆசை.. வீடு தேடி போனவருக்கு வில்லங்கம்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி சின்ன எலசகிரி ஆர்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாது என்பவர் மனைவி துளசி மணி பெயரில் வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டு மனைக்கு ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டு வரி ரசீது பெற்று தரக்கோரி ஆர்.ஆர்.நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் பிரபுவிடம் முறையிட்டார். இந்த வீட்டு வரி ரசீது வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஓசூர் மாநகராட்சி பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி சின்ன எலசகிரி ஆர்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயதாகும் மாது என்பவர் ஆர்.ஆர். நகர் குடியிருப்போர் நல சங்கத்தில் பொருளாளராக இருக்கிறார். இவர் தனது மனைவி துளசி மணி என்பவர் பெயரில் வீட்டுமனை வாங்கி உள்ளார் அந்த வீட்டு மனைக்கு ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டு வரி ரசீது பெற விரும்பினார்.இதற்காக ஆர்.ஆர்.நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் பிரபுவிடம் முறையிட்டார். அதற்காக வீட்டுக்கான ஆவணங்களையும் கொடுத்திருக்கிறார்.

Krishnagiri Hosur Corporation Bill Collector Wants to Earn Rs 75 000 in a Day Twist at the End

அதனை தொடர்ந்து கடந்த வாரம், பிரபு ஓசூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டு வரி ரசீது போடும் பில் கலெக்டர் ரஜினி என்பவரை சந்தித்துள்ளாராம். அவரிடம் வீட்டிற்கான ஆவணங்களை கொடுத்து வீட்டு வரி ரசீது வழங்க கேட்டுக் கொண்டிருக்கிறார் அதன் பேரில் பில் கலெக்டர் ரஜினி துளசி மணியின் வீட்டுமனையை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீட்டு வரி ரசீது வழங்க கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறும், வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.75 ஆயிரம் தனியாக கொடுக்க வேண்டும் என்று கேட்டாராம்.

அதற்கு பிரபு பில் கலெக்டரிடம் அவ்வளவு பணம் வீட்டு உரிமையாளரான மாதுவால் கொடுக்க முடியாது என தெரிவித்தார். அப்படி என்றால் முதல் தவணையாக ரூ.25 ஆயிரம் கொடுங்கள். வீட்டு வரி ரசீதை வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்தாராம். மீதி பணம் ரூ.50 ஆயிரம் வேலை முடிந்த பிறகு கொடுங்கள். பணம் ரெடியானதும் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம் என்று கூறினாராம். இதன் பின்னர் கடந்த வாரம் மக்கள் கணினி மையத்தில் ஆன்லைன் மூலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு துளசி மணி பெயரில் வீட்டு வரி ரசீது வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார். பில் கலெக்டர் ரஜினிக்கு பணம் கொடுக்க விருப்பம் இல்லாததால் மாதுவின் சார்பில் பிரபு கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் அளித்தாராம்.

புகரைப் பெற்றுக் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை பிரபுவிடம் நேற்று மாலை கொடுத்து அனுப்பியதுடன் கண்காணிப்பதற்காக மாறுவேடத்தில் சென்றுள்ளனர். அந்த நேரம் பிரபுவிடம் பணத்தை பில் கலெக்டர் ரஜினி வாங்கிய போது அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரவி, சப் -இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் ஓசூர் மாநகராட்சி பில் கலெக்டர் ரஜினியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சில ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டு வரி ரசீது வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓசூர் மாநகராட்சி பில் கலெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+