கிருஷ்ணகிரியை கிறங்கடிக்கும் தக்காளி.. ஓசூர் ராமரெட்டியின் தக்காளி தோட்டத்தை பார்த்தீங்களா? வேற வழி?

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: மீண்டும் தக்காளி உயர்ந்து வரும்நிலையில், நிறைய தக்காளிகள் திருடு போவதாக புகார்கள் வெடித்து கிளம்பி உள்ளன. குறிப்பாக, விவசாயிகள் இந்த வேதனை புகார்களை சொல்கிறார்கள்.

கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை உயர்ந்து வருகிறது.. மழை பாதிப்பு, வரத்துக்குறைவு உள்ளிட்ட காரணங்களினால், தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியது.

Krishnagiri Hosur farmers have fenced their Tomato garden to prevent tomato theft

பண்ணை பசுமைக்கடைகள்: கடந்த வாரத்தில் லேசாக குறைந்திருந்த தக்காளி விலை, இப்போது மறுபடியும் 200 ரூபாயை தாண்டி செல்கிறது.. தமிழ்நாட்டில் பண்ணைப் பசுமை கடைகள் மற்றும் சுமார் 300 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் அங்கு குவிந்து வருகிறார்கள்.

இதனால், தக்காளி விலையை கட்டுப்படுத்துவது மற்றும் தக்காளிக்கு உரிய விலையை நிர்ணயிப்பது என அடுத்தக்கட்ட ஆலோசனைகளில் தமிழக அரசும் மும்முரமாகி வருகிறது. எனினும், தக்காளி இல்லாமலேயே குழம்புகளை வைக்கும் பரிதாப நிலைமை தமிழ்நாட்டுக்கும் வந்துவிட்டது. பெரும்பாலான ஹோட்டல்களில் தக்காளி சட்னியே அரைப்பது கிடையாதாம். இந்த தக்காளியால் ஏகப்பட்ட பஞ்சாயத்துகளும், விநோத சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன..

கண்ணீர் கணவன்: மத்தியப் பிரதேசத்தில் தக்காளியால் சண்டை ஏற்பட்டு ஒரு குடும்பமே பிரிந்துவிட்டது.. தன்னுடைய மனைவியிடம் கேட்காமல் 2 தக்காளிகளை எடுத்து சமையலுக்கு பயன்படுத்திவிட்டாராம் கணவர்.. இதனால், அந்த மனைவி கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அந்த மனைவியை காணோம் என்று கண்ணீருடன் 4 நாள் தேடிய நிலையில், கடைசியில் அவரை கண்டுபிடித்துவிட்டார்.
இதேபோல, ஒரு செல்போன் கடையில், ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.. இதை பார்த்ததுமே, அந்த பகுதியில் உள்ள மற்ற கடைகளும் ஸ்மார்ட்போன் வாங்கினால் தக்காளி இலவசம் என்று அறிவிக்கும் அளவுக்கு நிலைமை சென்றன..

தம்பதி தகராறு: உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில், ஒரு காய்கறி வியாபாரி தன்னுடைய கடைக்கு தக்காளியை பாதுகாப்பதற்காக பவுன்சர்களை நியமித்த அதிசயமும் நடந்துள்ளது. அவ்வளவுஏன், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில், ஒரு வீட்டில் நடந்த சீமந்த நிகழ்ச்சியில், வரிசை தட்டுகளுடன் சேர்த்து தக்காளியையும் ஒரு தட்டில் சீராக வைத்திருந்தார்கள்.

பெருத்த வருமானம்: எனினும், தமிழகத்தில், 100 முதல் 150 ரூபாய் வரை வைத்து, தக்காளியை விற்பதால், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் தக்காளி பயிரிட்டுள்ள சில விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.. ஆனால், தக்காளியின் இந்த திடீர் விலை அதிகரிப்பால் ஓசூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் தக்காளி திருட்டு சம்பவங்களும் அதிகரித்து விட்டதாம். அதனாலேயே, ஓசூர் பகுதியில் விவசாயிகள் இரவு பகலாக தங்கள் தோட்டத்தை, கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.

இதைத்தவிர, தக்காளி தோட்டத்திற்கு முள்வேலிகளையும் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்... ஓசூர் அருகே தாசிரிப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமரெட்டி என்ற விவசாயி, கிட்டத்தட்ட 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்திருக்கிறாராம்.

இரும்பு வேலி: ஆனாலும், தக்காளி திருட்டு தொடர்ந்து நடைபெறுவதால், தக்காளி விற்பனை செய்து தனக்கு கிடைத்த லாபத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தோட்டத்தை சுற்றிலும் கருங்கல் தூண்களை நட்டுவைத்து, இரும்பு வேலியை போட்டுவிட்டாராம்.. அத்துடன், தக்காளி தோட்டத்தை கண்ணும் கருத்துமாக தூங்காமல் பாதுகாத்தும் வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+