கிருஷ்ணகிரியில் கேட்ட அந்த சத்தம்.. மணப்பாறை ரோடெல்லாம் பாரத் மாதா கி ஜே.. துள்ளி குதிக்குது "தாமரை"
சென்னை: 3 மாநில தேர்தல் வெற்றியை தமிழக பாஜகவினர், தொடர்ந்து கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.. இந்த வெற்றியானது, பாஜகவுக்கு கூடுதல் தெம்பையும், நம்பிக்கையையும் தந்து கொண்டிருக்கிறது.
எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருகிறது. அந்தவகையில், கிருஷ்ணகிரி தொகுதியிலும் களப்பணிகள் நடந்து வருகின்றன.. ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூர், தளி என்ற 6 சட்டப்பேரவை தொகுதிகளை ஒதுக்கியது, இந்த தொகுதி.

பாஜக: மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் தலைமையில், நேற்றுகூட, கட்சி பொறுப்பாளர்களுக்கான சந்திப்பு கூட்டம் நேற்றுகூட, கிருஷ்ணகிரியில் நடந்தது. அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, "கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், பாஜகவின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். கிராமங்கள்தோறும், வாக்காளர்கள் சந்தித்து மத்திய அரசு நிறைவேற்றிய திட்டங்களை சொல்லி, வாக்குகளை சேகரிக்க வேண்டும். தமிழகத்துக்கு பிரதமர் வழங்கிய திட்டங்களை பொதுமக்களிம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றெல்லாம் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 மாநாடுகளை நடத்துவது, அடுத்த வருட ஜனவரி 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்துக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பாஜக: இதேபோல, சேலம் பாஜகவும் மும்முரமாகி வருகிறது. இன்று 4 மாநில தேர்தல் ரிசல்ட் வந்ததையடுத்து, சேலம் மாவட்டமே படுகுஷியாகிவிட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 3 மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக வெற்றி பெற்றதையடுத்து சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில், பட்டாசு வெடித்து, கொண்டாடினர்..
பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகளை வழங்கி பாஜகவினர் கொண்டாடினார்கள்.. அதேபோல, அயோத்தியாப்பட்டிணம் பஸ் ஸ்டாப் அருகே மாவட்ட பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
கொண்டாட்டம்: அதேபோல, திருச்சியிலும் இதே போன்று பாஜகவினர் கொண்டாட்டத்தில் இறங்கினர். மணப்பாறை பஸ் ஸ்டாண்டு முன்பு பட்டாசு வெடித்தும், பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளுக்கும், சாலையில் டூ வீலர்களில் சென்று கொண்டிருந்தவர்களுக்கும் ஸ்வீட் தரப்பட்டது. திருச்சியின் பெரும்பாலான சாலைகளில், கையில் கொடியேந்தி, பாரத் மாதா கி ஜே என்ற முழக்கம் இன்று ஒலித்தபடியே இருந்தது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications