கிருஷ்ணகிரி விஏஓ ஆபீஸில்.. சொத்து பத்திரங்களுடன் நின்ற தங்கை.. அடுத்த செகண்டே தெறித்தோடிய ஊத்தங்கரை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஊத்தங்கரை விஏஓ ஆபீசிலேயே இப்படியொரு கொடுமை நடந்துள்ளது.. குடும்ப சண்டை விஏஓ அலுவலகம்வரை வந்துள்ளது. பட்டப்பகலில் இதை பார்த்த பொதுமக்கள், தலைதெறிக்க ஓடியிருக்கிறார்கள்..
சொத்தை எழுதி தர மறுத்ததால் விஏஓ அலுவலகத்தில் தந்தை மற்றும் தங்கையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ளது கொட்டுக்காரன்பட்டி.. இங்கு வசித்து வருபவர் 80 வயது விவசாயி வரதன்.. இவரது மனைவி 30 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.
வாரிசுகள்: இவருக்கு லவகிருஷ்ணன்(57), கணேசன் (47), கிருஷ்ணன் என்ற 3 மகன்களும், மணவள்ளி(55), மங்கம்மாள்(45) என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் கிருஷ்ணன் 10 வருடத்துக்கு முன்பேயே இறந்துவிட்டார்..
விவசாயி வரதனுக்கு மூன்றரை ஏக்கரில் நிலம் இருப்பதால், 3 மகன்களும், 15 சென்ட் அளவில் நிலத்தை எடுத்து வீடு கட்டி வசித்து வருகிறார்கள்.. மூத்த மகன் லவகிருஷ்ணன் விவசாயத்துடன் துணி வியாபாரமும் சேர்த்து பார்க்கிறார்.. இவரது 2 மனைவிகளுமே இறந்துவிட்ட நிலையில், ஒரே ஒரு மகள் இருக்கிறார். அவர் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்..

சொந்த நிலம்: இதற்கு நடுவில், மகள் மணவள்ளி கணவரை பிரிந்துவிட்டதால், தனக்கும் நிலத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டு வருகிறார்.. அத்துடன், அந்த நிலத்தில் வீடு கட்டியும் வசித்து வருகிறார். எனினும், அப்பா தனக்கு சொத்தை பிரித்து தராமல் விட்டுவிடுவாரோ என்று நினைத்து, தனக்கும் வாரிசுப்படி அப்பா சொத்தில் பங்கு வேண்டும் என கேட்டு கடந்த 2015ல் ஊத்தங்கரை கோர்ட்டில் வழக்கு தொடுத்தார் மணவள்ளி.
மகள் கோர்ட்டுக்கு சென்றதை கண்டு அதிர்ந்த வரதன், மகன் லவகிருஷ்ணனிடம் இதுகுறித்து பேசியிருக்கிறார்.. சொத்தை எக்காரணம் கொண்டும் பிரிக்கக்கூடாது என்றும், வழக்கை எதிர்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருக்கிறார். இதனால், லவகிருஷ்ணனும் வக்கீல்களை வைத்து இந்த வழக்கை நடத்திய நிலையில், கடந்த ஜூன் மாதம் மணவள்ளி தொடர்ந்த வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.
வாய்த்தகராறு: இதையடுத்து, இந்த கேஸூக்காக பல லட்சம் செலவு செய்திருப்பதால், சொத்தை பிரித்து தனக்கு தரவேண்டும் என்று அப்பாவிடம் கேட்டுள்ளார் லவகிருஷ்ணன்.. இதில் அப்பா - மகனுக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியிருக்கிறது.
ஒருகட்டத்தில் மகன் மீதிருந்த கோபத்தில், "மகள் மணவள்ளிக்கே சொத்தை கொடுப்பேன்" என்று வரதன் சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த லவகிருஷ்ணன், மகளுக்கு சொத்து போனால், கொலையே செய்துவிடுவேன் என்று அப்பாவை மிரட்டினார்.
இந்நிலையில், நேற்று வரதன் தன்னுடைய சொத்து தொடர்பாக சான்றிதழ் வாங்குவதற்கு, மகள் மணவள்ளியுடன் மூன்றம்பட்டி விஏஓ ஆபீசுக்கு சென்றிருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே லவகிருஷ்ணன் அரிவாளை எடுத்துக் கொண்டு, விஏஓ ஆபீசுக்கே சென்றுவிட்டார்.. அந்த அலுவலகத்திலேயே குடும்ப சண்டை வலுத்தது..
விஏஓ ஆபீஸ்: அப்போது இதில், ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன் அரிவாளால் அப்பா வரதனையும், தங்கை மணவள்ளியையும் சரமாரியாக வெட்டினார். இதில், 2 பேருமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து, விஏஓ ஆபீசிலேயே இறந்துவிட்டனர்.. பட்டப்பகலில் விஏஓ ஆபீசுக்கு வந்திருந்த அனைவருமே இதை பார்த்து, அலறியடித்து ஓடினார்கள்.. தகவலறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து லவகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்...!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications