கிருஷ்ணகிரி காட்டுக்குள் வட்டி பணம் வாங்க போன பெண்.. பறந்து வந்த லைவ் லொகேஷன்.. 5 மணி நேரம் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பர்கூர் பகுதியில் கடன் கொடுத்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு வரவழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மயக்கம் ஏற்படுவதற்கு முன்பாக அந்த பெண் சுதாரித்துக்கொண்டதால் அடுத்தடுத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம், மங்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாகியும் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்ததாகவும் தெரிகிறது.

Krishnagiri

கிருஷ்ணகிரி வட்டி பணம்

இதையடுத்து சுமார் 4 மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷை அவரது வீட்டுக்கு வரவழைத்த அந்தப் பெண், கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக பத்திரம் எழுதி வாங்கியுள்ளார். அதில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வட்டியாக கொடுக்க வேண்டும் என்றும், ஒரு வருடத்துக்குள் அசல் தொகையான ரூ.5 லட்சத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்ததாராம்.

இந்த நிலையில், தனக்கு தர வேண்டிய வட்டிப் பணத்தை கேட்பதற்காக அந்தப் பெண் வெங்கடேஷை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், வட்டிப் பணத்தை தருவதாக சொல்லி, அந்தப் பெண்ணை தனியாக ஒரு காட்டுப்பகுதிக்கு வரவழைத்துள்ளார்..

காட்டுக்குள் சென்ற பெண்

அங்கு வெங்கடேஷுடன் அவரது உறவினரான இளங்கோவும் இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு கூல்டிரிங்ஸ் தந்துள்ளனர்.. ஆனால் முன்கூட்டியே அதில் மதுபானத்தையும் கலந்து வைத்துவிட்டனர்.. இது தெரியாமல் அந்த கூல்டிரிங்ஸை குடித்துவிட்டார்.. சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கிய பிறகு பாலியல் வன்கொடுமை செய்யவும், ஆபாச வீடியோ எடுக்கவும் நண்பர்கள் இருவரும் திட்டம் போட்டனர்..

எதிர்பார்த்தபடியே, அந்த பெண்ணுக்கு மயக்கம் வர ஆரம்பித்தது.. ஆனால், மயங்குவதற்கு முன்பாகவே நிலைமையை உணர்ந்துகொண்டு அலர்ட் ஆகிவிட்டார்.. நடுக்காட்டில் மாட்டி கொண்டிருந்ததால், அங்கிருந்து எப்படி தப்பி செல்வது என்றும் அப்பெண்ணுக்கு தெரியவில்லை. உடனடியாக தனது செல்போனை எடுத்து வாட்ஸ்அப்பில் "Help Me" என்று மெசேஜ் டைப், தான் இருக்கும் இடத்தின் லைவ் லொகேஷனை, பெற்றோருக்கு அனுப்பியுள்ளார்.

லைவ் லொகேஷன் மெசேஜ்

இந்த மெசேஜ் பார்த்து பதறிப்போன பெற்றோர், உடனடியாக போலீசுக்கு ஓடினார்கள். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட லைவ் லொகேஷனை அடிப்படையாக வைத்து, அந்தப் பெண் இருந்த இடத்தை தனிப்படை போலீசார் தேடி சென்றுள்ளனர். சுமார் 5 மணி நேரத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணை போலீசார் மீட்டனர்..

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வெங்கடேஷ் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் மீது பல்வேறு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.5 லட்சம் கடன் வாங்கி, அதற்கு வட்டியும் கட்டாமல், வட்டி பணம் கேட்ட பெண்ணையும் பலாத்காரம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பர்கூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஆபத்தில் இருந்தபோதும் அந்தப் பெண் அனுப்பிய ஒரு "Help Me" மெசேஜ், லைவ் லொகேஷனை வைத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக பெண்ணை மீட்டது, கிருஷ்ணகிரியில் கவனம் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+