கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி: காங்கிரஸ் மீண்டும் வெல்லுமா? 'சந்தன' வீரப்பன் மகள் சரித்திரம் படைப்பாரா?
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: ஒசூர், பர்கூர், தளி, ஊத்தங்கரை (தனி), வேப்பனஹள்ளி. 2021 தேர்தலில் ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரியில் அதிமுகவும், ஓசூர், பர்கூரில் திமுகவும், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றன.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் அதிகபட்சமாக 8 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. திமுக 5, அதிமுக 3, தமாகா 1 முறை வென்றிருக்கிறது. 1980, 1984, 1989, 1991-ல் காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி வென்ற தொகுதி கிருஷ்ணகிரி.

கர்நாடகா, ஆந்திரா எல்லையில் உள்ள தொகுதி கிருஷ்ணகிரி. தமிழ், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் இணைந்து வாழ்கின்றனர். பல்வேறு தொழிற்சாலைகளைக் கொண்ட தொகுதி. வெளி மாவட்ட வாக்காளர்களும் கணிசமாக இருக்கின்றனர்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி வாக்காளர்கள்: 16,09,913; ஆண்கள் - 8,07,389 பெண்கள்- 8,02,219; 3-ம் பாலினத்தவர்- 305.
2004 லோக்சபா தேர்தல் முடிவுகள்
சுகவனம் (திமுக) - 4,03,297
நஞ்சே கவுடா (அதிமுக) - 2,84,075
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
சுகவனம் (திமுக) 3,35,977
நஞ்சே கவுடா அதிமுக(2,59,379)
அன்பரசன்(தேமுதிக) 97,546
பாலகிருட்டிணன்(பாஜக)20,486

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
அசோக்குமார்(அதிமுக) 4,80,491
சின்னபில்லப்பா(திமுக) 2,73,900
கோ. க. மணி(பாமக) 2,24,963
செல்லக்குமார்(காங்கிரஸ்) 38,885
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
செல்லக்குமார் (காங்கிரஸ்)- 6,11,298
கேபி முனுசாமி (அதிமுக) 4,54,533
மதுசூதனன் (நாம் தமிழர் கட்சி) 28,000
2024-ல் களம் காணும் வேட்பாளர்கள்
கோபிநாத் (காங்கிரஸ்)
ஜெயப்பிரகாஷ் (அதிமுக)
நரசிம்மன் (பாஜக)
வித்யா ராணி (நாம் தமிழர் கட்சி)
கிருஷ்ணகிரி தொகுதி எப்படி இருக்கிறது?: காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், ஓசூர் எம்.எல்.ஏ.வாக 3 முறை பணியாற்றியவர். அவரையே இம்முறை கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் களமிறக்கிவிட்டது. அதிமுக சார்பில் ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் ஜெயப்பிரகாஷூக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பாமகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர். பாஜகவின் வேட்பாளராகப் போட்டியிடுகிறவரும் மாஜி காங்கிரஸ் கட்சி எம்பிதான். தமாகா எம்பியாக இருந்த நரசிம்மன், இப்போது பாஜக வேட்பாளர். இவர்களுடன் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் மகள் வித்யா ராணியை மோதவிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதனால் கிருஷ்ணகிரி தொகுதியின் பக்கம் அனைவரது கவனமும் திரும்பியிருக்கிறது. ஓசூர் ரயில்வே திட்டங்கள், விமான நிலையம் ஆகியவை எதிர்பார்ப்புக்குரியவை. மாங்கூழ் தொழிற்சாலை உள்ளிட்ட மாம்பழத்தை மையமாக வைத்த தொழிற்சாலைகளும் பெரும் எதிர்பார்ப்பு. காங்கிரஸ் கோட்டையாகவே கிருஷ்ணகிரி இருக்குமா? என்பது ஜூன் 4-ந் தேதி தெரியுமே.












Click it and Unblock the Notifications