கிருஷ்ணகிரி மத்தூர் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்! உடல் கருகி இருவர் பலியான சோகம்!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள நாகம்பட்டி (டோல்கேட்) பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் பைக் தீப்பிடித்து ஒருவர் உடல் கருகியும், மற்றொருவர் பாதி எரிந்த நிலையிலும் பலியாகிவிட்டனர்.

இன்று காலை கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி ஒரு இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர். அதேபோல, திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருவர் வந்து கொண்டிருந்தனர்.

Krishnagiri shocker

மத்தூரை அடுத்த நாகம்பட்டி டோல்கேட் அருகே இரு வாகனங்களும் அதிவேகமாக வந்தபோது, எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

மோதிய வேகத்தில் பைக்கில் இருந்த செல்போன்களின் பேட்டரி பற்றியதில் ஒரு இருசக்கர வாகனம் உடனடியாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில், அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் தீயில் சிக்கி, சம்பவ இடத்திலேயே முற்றிலும் உடல் கருகி உயிரிழந்தார்.

மற்றொரு வாகனத்தில் வந்த நபர் பலத்த தலைக்காயமடைந்து பாதி எரிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த தருமபுரி பகுதியை சேர்ந்த வேல் (27) மற்றும் திருப்பதி (30) ஆகிய இருவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக மத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட பட்டன் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் சிதறிக் கிடந்தன. இது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் யார் என்ற விவரம் உடனடியாக தெரியவரவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு பைக்கில் செல்லும் இளைஞர்கள் இருவர், அங்கிருந்த நாயை வம்பிழுத்துள்ளனர். அந்த நாயை சுற்றி சுற்றி பைக்கை ரவுண்டடித்தனர். இதையடுத்து பைக்கில் எடுத்துக் கொண்டு நேராக சென்ற போதுதான் மற்றொரு பைக்குடன் நேருக்கு நேர் மோதி தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்தது.

பைக்குகள் மோதி தீயில் கருதி இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாக சென்றோர் பைக் தீப்பிடித்த போது அதை அணைக்க முயற்சித்தும் பைக்குகள் வீரியமாக கொழுந்துவிட்டு எரிந்ததால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+