கிணற்றில் விழுந்து மூழ்கிய அக்காள், தம்பி.. 'அந்த ஒரு மணி நேரம்'.. போச்சம்பள்ளி அருகே பெரும் சோகம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த அக்காள் தம்பி, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த வழியாக யாருமே செல்லாததால் குழந்தைகள் இறந்து போனது யாருக்குமே தெரியாமல் இருந்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மகாதேவ கொல்லஅள்ளி பூலான்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன சென்னையில் உள்ள பேக்கரி ஒன்றில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்திரிகா. இவர்களுக்கு ஸ்ரீநிகா (வயது 5) என்ற மகளும், அனிருத் (3) என்ற மகனும் இருந்தார்கள்

இதற்கிடையே சந்திரிகா தனது மகள், மகனுடன் கொல்லஅள்ளி பூலான்குட்டையில் வசித்து வந்தார். நேற்று மாலை ஸ்ரீநிகா, அனிருத் தங்களது வீட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கிணற்றில் அக்காள், தம்பி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்கள்.
பின்னர் அவர்கள் 2 பேரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மணி நேரத்துக்கு யாரும் செல்லவில்லை. இதனால் குழந்தைகள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. இதனிடையே விளையாட சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த சந்திரிகா அவர்களை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.

அப்போது தனது 2 குழந்தைகளும் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததை அறிந்து கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்த அக்காள், தம்பியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications