Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அபிராமி"யை ஞாபகம் இருக்கா.. உறவுக்கு குறுக்கே வந்த "தாலி".. டிராமா வேற.. ராயக்கோட்டை லேடியை பாருங்க

ராயக்கோட்டையில் 9 மாத குழந்தையை கொன்றுள்ளார் பெற்ற தாய்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அபிராமியின் கொடூரத்தை பார்த்து அதிர்ந்துபோய் உள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள்..!!

2018-ல் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. குன்றத்தூர் அபிராமி என்றாலே பிரபலம்..

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற 2 குழந்தைகளையும், பாலில் விஷம் வைத்து கொன்றவர் இந்த குன்றத்தூர் அபிராமி.

 தப்பு பண்ணிட்டேன்

தப்பு பண்ணிட்டேன்

இது தொடர்பான வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பிலும் விசாரணை நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது.. அபிராமி மீது குற்றம் நிரூபணமாகி உள்ளதால், அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வெளியாகலாம் என்கிறார்கள். சிறையில் இருக்கும்போது, அபிராமி மனம் வருந்தி, தப்பு பண்ணிட்டேன்.. என் குழந்தைகளை கொன்றிருக்க கூடாது.. அவங்க போட்டோவையாவது என்கிட்ட காட்டுங்க" என்று கதறி அழுதது நினைவிருக்கலாம். ஆனால், அதுபோலவே அடுத்தடுத்த அபிராமிகள் உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள்..

 சித்வதை

சித்வதை

அதிலும், உலகமே அறியாத, பிஞ்சு குழந்தைகளை, பெற்ற தாயே துடிதுடிக்க கொல்வதையும், சித்ரவதை செய்வதையும் ஜீரணிக்கவே முடிவதில்லை.. இதுபோன்ற "அபிராமிகளின்" அட்டகாசங்களும் அடங்குவதில்லை... இதோ இன்னொரு அபிராமி ராயக்கோட்டையில் உருவாகி உள்ளார்.. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ்.. 27 வயதாகிறது.. இவர் ஒரு கூலித் தொழிலாளி... இவரது மனைவி பெயர் ஞானமலர்.. 21 வயதாகிறது..

 ஜாலி

ஜாலி

4 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.. இரண்டரை வயதில், இந்த தம்பதிக்கு பிரபாஷ் என்ற மகனும், ஆதிரா என்ற 9 மாத பெண் குழந்தையும் இருக்கிறார்கள். மாதேஷ் தினமும் கூலி வேலைக்காக வெளியே சென்று விடும் நிலையில், தங்கராஜ் என்ற இளைஞருடன் ஞானமலருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இது கள்ளக்காதலாக உருமாறியது.. மாதேஷ் வேலைக்கு கிளம்பியதுமே, தங்கராஜ் வீட்டுக்கு வந்துவிடுவாராம்.. அதற்கு பிறகு, இருவரும் ஜாலியாக இருந்து வந்துள்ளனர்.. ஒருநாள் இந்த விஷயம் அறிந்து மாதேஷ், மனைவியை கண்டித்துள்ளார்..

அட்வைஸ்

அட்வைஸ்

அத்துடன், கள்ளக்காதலை கைவிடும்படியும் அட்வைஸ் செய்துள்ளார்.. ஆனால், ஞானமலர், மாதேஷ் பேச்சை கேட்கவில்லை.. மேலும் தனக்கு தொடர்ந்து அட்வைஸ் செய்து கொண்டிருந்ததால், ஆத்திரம் அடைந்து, கள்ளக்காதலனிடம் இதை பற்றி புலம்பி கொண்டே வந்தார்.. "குழந்தைகளை காரணம் காட்டிதான், கள்ளக்காதலை கைவிடும்படி சொல்கிறார்.. அதனால், குழந்தைகளை கொன்றுவிடலாம்" என்று ஞானமலர் தங்கராஜிடம் சொன்னாராம்.. உடனே தங்கராஜ், எலிபேஸ்ட்டை வாங்கி வந்து தரவும், அதை குழந்தைகள் பிரபாஷ், ஆதிரா ஆகியோருக்கு தந்துவிட்டார்..

 எலிபேஸ்ட்

எலிபேஸ்ட்

பிறகு, மாதேஷுக்கு போன் செய்து, நானும் குழந்தைகளும் எலிபேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்று அழுதவாறே சொல்லி உள்ளார்.. இதனால் பதறிப்போன மாதேஷ், வீட்டுக்கு வந்து பார்த்தால், 3 பேருமே மயங்கி விழுந்திருந்தனர்.. அவர்களை உடனடியாக மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள்.. ஆனால், சிகிச்சை பலனின்றி 9 மாத பெண் குழந்தை ஆதிரா பரிதாபமாக இறந்துவிட்டது.. இன்னொரு குழந்தைக்கு சிகிச்சை நடக்கிறது.. டாக்டர்கள் ஞானமலரை செக்கப் செய்ததில் அவர் எலிபேஸ்ட் சாப்பிடவில்லை என்பது நிரூபணமானது..

 கம்பி எண்ணுகிறார்

கம்பி எண்ணுகிறார்

தற்கொலை செய்து கொள்வதுபோல், நாடகமாடியதும் தெரியவந்தது.. இதையடுத்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டபோதுதான், குழந்தைகளுக்கு கொலை செய்ய எலிபேஸ்ட்டை தந்தது உறுதியானது.. இறுதியில், ஞானமலர் மற்றும் கள்ளக்காதலன் தங்கராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.. கைதான ஞானமலர் சேலம் பெண்கள் ஜெயிலிலும், தங்கராஜ் சேலம் மத்திய ஜெயிலிலும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+