மரண பயம் காட்டி வந்த சிறுத்தை பிடிபட்டது! கிருஷ்ணகிரி மக்களுக்கு அதிகாலையில் வந்த நல்ல சேதி!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை புலி, வனத்துறையினரின் கூண்டில் பிடிபட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூர் பகுதியில் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக அங்குள்ள தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வந்துள்ளது.

அவ்வப்போது இந்த சிறுத்தைப் புலியானது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சில சமயங்களில் தாக்கிக் கொன்றுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சிறுத்தை புலியை தீவிரமாக தேடி வந்தனர்.
சில சமயங்களில் அந்த ரிசார்ட் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் இந்த சிறுத்தை நடமாடி வருவது பதிவாகி இருந்த நிலையில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பது என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தினர்.
மேலும் அந்த ரிசார்ட் அருகே மல்லிகை ஃபார்ம்ஸ் எனப்படும் தனியாருக்கு சொந்தமான மற்றொரு ரிசார்ட் பகுதியில் சிறுத்தை புலியை பிடிப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்ட கூண்டு ஒன்றை வைத்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதை வனத்துறையினர் கண்டு உறுதி செய்தனர். இதை எடுத்து பிடிப்பட்ட சிறுத்தையை வனப்பகுதிக்குள் விடுவது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சிறுத்தை புலிக்கு மயக்க ஊசி செலுத்துவது தொடர்பாக கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் இதன்பிறகு சிறுத்தையை அடர்ந்த காட்டில் விடுவதாக திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு வருடங்களாக போக்கு காட்டி அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை புலி கூண்டில் சிக்கியது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications