கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
கிருஷ்ணகிரி: லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவதால் தம்மை நாம் தமிழர் கட்சியினர் அடித்து தாக்கியதாக திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனி ஆறுமுகம் என்பவர் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்துக்காக பெரும் போராட்டத்தை நடத்திப் பார்த்தது. கர்நாடகாவை சேர்ந்த லெட்டர் பேடு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஒதுக்கியதை மறுபரிசீலனை செய்யவும் மறுத்தது. இதனால் தற்போது சீமானின் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது.

கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற கர்நாடகா லெட்டர் பேடு கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, தமிழ்நாட்டில் மற்றொரு லெட்டர் பேடு கட்சியான திராவிட தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்துள்ளது. கரும்பு விவசாயி சின்னத்தில் தமிழ்நாட்டில் 13 இடங்களில் போட்டியிடுவதாகவும் இந்த கூட்டணி அறிவித்து வேட்பு மனுத் தாக்கல் செய்தது. கிருஷ்ணகிரியில் முனி ஆறுமுகம் என்பவர் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட வேட்பு மனுவும் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட 34 பேர் மொத்தம் 41 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 6 வேட்பாளர்களின் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 28 பேரின் 34 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், அஇஇமுகவின் வசந்தா, சுயேட்சைகளான சண்முகம், சாந்தமூர்த்தி ஆகியோரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் முனி ஆறுமுகம் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவதால் நாம் தமிழர் கட்சியினர் தம்மை தாக்கிவிட்டதாக முனி ஆறுமுகம் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். தாம் ஓசூர் நோக்கி சென்ற போது கும்மனூரில் 20-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு தம்மை தாக்கியதாகவும் வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியதாகவும் முனி ஆறுமுகம் கூறியுள்ளார். தம்மை தாக்கிய நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் முனி ஆறுமுகம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications