ராணுவ வீரர் கொலை! ஜாமீன் கேட்ட திமுக கவுன்சிலர்! போலீஸ் வைத்த வாதம்! மனுவை நிராகரித்த சென்னை ஐகோர்ட்

கிருஷ்ணகிரியில் வாக்குவாதம் ஒன்றில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதாகப் பதிவான வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலரின் மகன் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் சில அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கினர்.

இதில் ஏற்கனவே தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அவர்களில் மூவர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் அவர்களை மனுவை ரத்து செய்துள்ளது.

 வாக்குவாதம்

வாக்குவாதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபு. ராணுவத்தில் பணிபுரிந்த இவர்கள், சில வாரங்களுக்கு முன்பு விடுமுறைக்குச் சொந்த ஊருக்குத் திரும்பினர். கடந்த மாதம் பிரபு தனது வீட்டின் அருகே உள்ள குடிநீர்த் தொட்டியின் அருகில் துணிகளைத் துவைத்துள்ளார். அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர் சின்னசாமி, இது துணிகள் துவைக்கு இடமா என்று கேட்டு வாக்குவாதம்

கொலை

கொலை

இந்த விவகாரத்தில் பிரபு - சின்னசாமி இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபுவின் அம்மா கண்ணம்மாளும் அங்கு வர, வாக்குவாதம் முற்றியுள்ளது. இதற்கிடையே சின்னசாமி தனது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் ஆகியோருடன் வந்து பிரபாகரன், அவரது சகோதரர் பிரபு , நாய் கண்ணம்மாள் உள்ளிட்டோர் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் நான்கு பேரும் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர்.

கைது

கைது

இருப்பினும், சில நாட்களில் ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சின்னசாமி உட்பட 9 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக நாகரசம்பட்டி காவல் நிலையத்தினர் கொலை வழக்குப் பதிவு செய்து திமுக கவுன்சிலர் சின்னசாமி, அவரது மகன் புலிப்பாண்டி, தம்பி காளியப்பன், உறவினர் மாதையன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

 ஜாமீன் ரத்து

ஜாமீன் ரத்து

இந்நிலையில் சின்னசாமியின் மகன் புலிப்பாண்டி, சகோதரர் காளியப்பன், உறவினர் மாதையன் ஆகிய மூவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுகேந்திரன், கைதாகி விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், முன்கூட்டியே நீதிமன்றத்தை நாடியுள்ளதால், ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி, மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+